பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூந்துருத்தி முதல் காஞ்சி வரை 85 சில நாடகள் ஆனபிறகு திருத்தொண்டை காட்டுத் தலங்களைத் தரிசிக்கும் ஆவல் மீதுாரத் தொண்டர்களுடன் புறப்பட எண்ணினர். இதுவரையில் உடன் வந்துகொண் டிருந்த தந்தையாரிடம், "தாங்கள் இங்கே தங்கிச் செய்ய வேண்டிய வேள்விகளைச் செய்து கொண்டிருங்கள்' என்று கூறி விடை பெற்ருர், - - சீகாழியினின்றும் புறப்பட்ட ஞானச்செல்வர் தில்லை வந்து சிற்றம்பலத்தைப் பணிந்து, பின்பு பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு தொண்டை நாட்டிலுள்ள திரு வோத்துரர் என்னும் திருப்பதியை அடைந்தார். . . . அங்கே எழுந்தருளியிருக்கும் வேதபுரீசரை வணங்கி னர். அப்போது ஒரு சிவனடியார் அப்பெருமான வணங்கி அழுதபடியே ஒரு விண்ணப்பம் செய்துகொண்டார்: ‘எம்பெருமானே, இந்தத் திருக்கோயிலில் அடியேன் சில பனேகளே வைத்து வளர்த்தேன். அவை வளர்ந்தன. ஆனல் காய்க்கவில்லை. இங்குள்ள சமணர் சிலர், 'இவ் விடத்தில் கட்ட பனேயில் காயும் உண்டாகுமோ? என்று இழிவாகப் பேசுகிரு.ர்கள். யான் என் செய்வேன்!" என்ருர், - : . . . . அது கேட்டு இரங்கிய தமிழ்விரகர் உடனே "பத் தேர்ந்தாயன என வரும் திருப்பதிகத்தைப் பாடினர். அந்தப் பதிகத்தின் திருக்கடைக்காப்பில், "ஆண்பன் குரும்பைகளை ஈனும் ஒத்துார் என்று குறிப்பிட்டுப் பாடினர். - - குரும்பை ஆண்ட்னே ஈன்குக்ல ஒத்துார் அரும்பு கொன்றை அடிகளைப் பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்செர்ன் விரும்பு வார்வி&ன விடே என்பது அத்திருப்பாசுரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/91&oldid=784093" இலிருந்து மீள்விக்கப்பட்டது