பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருஞான சம்பந்தர் அப்போதே ஆண்பனைகள் காய்காய்த்துக் குலைவிட் டன. அது கண்டு இறைவன் அருள் வல்லபத்தை அறிந்து யாவரும் வியந்தனர். குறை கூறிய சமணர்கள் அஞ்சினர். சிலர் சைவராயினர். . திருவோத்துாரை நீங்கிய சிவஞானப்பிள்ளையார் குரங்கணில் முட்டம் என்னும் தலத்தைத் தரிசித்துக் கொண்டு காஞ்சிபுரத்தை அடைந்தார். . பல தல தரிசனம் காஞ்சிபுரத்து அன்பர்கள் சம்பந்தப் பெருமான் எழுந்தருள்வதை அறிந்து கரை அலங்கரித்து அவரை வரவேற்ருர்கள். எங்கும் வாழை மரம் கட்டித் தோரணங்கள் தொங்கவிட்டார்கள். சிறைகுடமும் விளக்கும் வைத்தார்கள். யாவரும் வணங்கி வரவேற்க, ஞானசம்பந்தர் பல்லக் கினின்றும் இறங்கி இறைவன் திருக்கோயிலை அணுகினர். உள்ளே புகுந்து மனம் உருகித் தரிசித்துத் திருப்பதிகம் பாடியருளினர். சங்கீத மழை பொழிய, மனத்தில் அன்பு பொழிய, பக்திப் பெருக்கால் கண்ணில் நீர் பொழிய, இறைவனத் தரிசித்துக் கொண்டு புறம் போக்தார். "மருவியன் திசையொழிய மனம்பொழியும் பேரன் பால் - பெருகியகண் மழைபொழியப் பெரும்புகலிப் பெருந்தகையார் உருகிய அன் புள் அகலப்பு உமைதழுவக் குழைந்தவரைப் பருகியமெய் யுணர்விளுெடும் பரவியே புறத்தனேந்தார்.” பின்பு காமக் கோட்டம் வந்து அம்மையைத் தரிசித் தார். அப்பால் காஞ்சீபுரத்திலுள்ள பிற தலங்களையும் தரிசித்துப் பதிகம் பாடித் திருப்பாசூர், திருவாலங்காடு முதலிய தலங்களை வழிபட்டுத் திருக்காளத்தியை அடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/92&oldid=784096" இலிருந்து மீள்விக்கப்பட்டது