பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல தல தரிசனம் 8? தார். அங்கே உள்ள தொண்டர் குழாமும் முனிவர்களும் வேடர்களும் பிறரும் வந்து எதிர்கொண்டு அழைத்துச் சென்ருர்கள். தொண்டர் திருக்கூட்டம் சிவலோகமே வந்தது. போன்ற தோற்றத்தை உண்டாக்க எழுந்தருளிய சம்பந்தர் முத்துச்சிவிகையினின்றும் இறங்கி, "எதிரே தோன்றும் மலேகளில் திருக்காளத்தி மலை யாது?" எனக் கேட்டார். அங்கு வந்த மாதவத்தினர் வணங்கித் தாழ்ந்து, "மறை வாழ்வே! சைவ சிகாமணியே! இதோ தெரிகிறதே இதுதான் காளன் என்னும் பாம்பும் அத்தியாகிய யானையும் ஒன்றைேடு ஒன்று மாறுபட்டு வழிபாடு செய்த திருக்காளத்தி' என்று காட்டினர். உடனே ஞானபோனகர் தரையின்மேல் விழுந்து பணிந்து எழுந்து அஞ்சவித்த கரங்களே உடையவராய். உள்ளத்தில் ஆனந்தம் பொங்கத் திருப்பதிகம் பாடத்தொடங்கினர். அந்தப் பதிகத்தில் ஒரு திருப்பாட்டில் கண்ணப்ப நாயனரைச் சிறப்பித்துப் பாடினர். வேய் அனய தோள் உமைஓர் பாகமது வாகவிடை ஏறி,சடைமேல் . அாயமதி சூடி,சுடு காடில்தட மாடிமலை . தன்னை வினவில் - - - - வாய் கலச மாகவழி பாடுசெயும் வேடன்மலர் ஆகும் நயனம் , . காய்கணேயி லிைடந் திசண்டி கூடுகா ளத்தி மகலயே! திருக்கோயிலேத் தரிசித்துக்கொண்டு, தாம் கும்பிட்ட பயனேக் காண்பவரைப்போலக் கண்ணப்ப நாயனரைக் கண்டு வீழ்ந்து பணிந்தார். அன்பின் உண்மை உருவான அவரையும் அவருள்ளே உள்ள சிவபெருமானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/93&oldid=784097" இலிருந்து மீள்விக்கப்பட்டது