பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருஞான சம்பந்தர் யும் ஒருங்கே கண்ட ஆனந்தம் மீதுார பல முறையும் அப்பெருமானே வணங்கினர். - பின்பு அங்குள்ள திருமடம் ஒன்றில் தங்கிக் காலங் தோறும் திருக்கோயில் சென்று வணங்கினர். அத்தலத் திற்கு வடக்கே தமிழ் வழங்காத நிலப் பரப்பில் உள்ள தலங்களே எண்ணி அங்கிருந்தபடியே திருப்பதிகம் பாடிப் போற்றினர். திருக்கைலாயம், திருக்கேதாரம், திருக் கோகரணம், பூநீசைலமாகிய திருப்பருப்பதம், இந்திர கீல பர்வதம் முதலியவற்றைப் பாடினர். திருக்காளத்தியில் தங்கியிருந்தபோது திருவொற்றியூர் வினைவு வரவே அங்கே சென்று தரிசிக்க எண்ணித் தென் திசை நோக்கிப் புறப்பட்டார். திருவேற்காடு, திருவலி தாயம் முதலிய திருப்பதிகளவழிபட்டுத் திருவொற்றியூரை அடைந்தார். அங்குள்ள தொண்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றுத் தொழுதார்கள். பிள்ளையாரும் எதிர் தொழுது, திருவொற்றியூர் இறைவனேப் பாடத் தொடங்கினர். - - விடையவன் விண்ணும்மண் ணுந்தொழ நின்றவன் வெண்மழுவாட் படையவன் பிாய்புலித் தோல் உடை கோவணம் பல்கரந்தைச் சடையவன் சர்மவே தன்சசி தங்கிய சங்கவெண்தோ டுடையவன் ஊனமில் லியுறை யும்மிடம் ஒற்றியூரே. - பாடிக்கொண்டே வந்து திருக்கோயிற் கோபுரத்தின் முன் விழுந்து பணிந்தார். பின்பு ஆலயத்துள் புகுந்து, எழுத்தறியும் பெருமானத் தரிசித்துத் திருப்பதிகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/94&oldid=784099" இலிருந்து மீள்விக்கப்பட்டது