பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்பு பெண்ணுனது 89 இறைவனேத் தரிசித்த இன்பத்தோடு புறம் போந்து அங்குள்ள திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். பொற்றிரள்கள் போற்புரிந்த சடையார் தம்பால் பொங்கிஎழும் காதல் மிகப் பொழிந்து விம்மிப் பற்றிஎழும் மயிர்ப்புளகம் எங்கும் ஆகிப் பரந்திழியும் கண்ணருவி பாய நின்று சொற்றிகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித் தொழுது புறத் தனந்தருளித் தொண்ட ரோடும் ஒற்றி நகர் காதலித்தங் கினிது றைந்தார் உலகுய்ய உலவர்த ஞானம் உண்டார்." எலும்பு பெண்ணுனது மயிலாப்பூரில் சிவநேசர் என்ற வணிகர் கப்பல் வாணி கம் செய்து பெரும் பொருளை ஈட்டினர். சிவபெருமானிடம் மாருத பேரன்பும் அடியார்களிடம் பக்தியும் உடையவராக இருந்தார். அவர் திருஞானசம்பந்தப் பெருமான் பெருமை யைக் கேள்வியுற்று அவருடைய திருவருட் சிறப்பை எண்ணி எண்ணி வியந்தார், o பலகாலம் மகப்பேறு இல்லாமையால் அதன் பொருட்டுத் தவம் செய்தார். சிவனே வழிபட்டார். அடியார் வழிபாடு செய்தார். அவற்றின் பயனக அவர் மனைவியின் திருவயிற்றில் ஒரு பெண் குழந்தை தோன்றிள்ை. கல்ல நேரத்தில் உதித்த அந்தக் குழந்தையைக் கண்டு மகிழ்ந்த சிவநேசர் அடியவர்களுக்கும் பிறருக்கும் அன்னம் ஆடை முதலியவற்றை வழங்கினர். பின்பு வேத விதிப்படி சாதகன்மம் முதலியன செய்து பத்து நாள் ஆன பின் புண்யாகவாசனமும் கடத்தினர். குழந்தை தாமரையில் தோன்றிய திருமகளைப் போன்ற - 露° . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/95&oldid=784100" இலிருந்து மீள்விக்கப்பட்டது