பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருஞான சம்பந்தர் அழகுடன் விளங்கியமையால் அவளுக்குப் பூம்பாவை என்று பெயரிட்டு வளர்க்கலானுர், . மாதங்தோறும் குழந்தைக்குச் செய்ய வேண்டிய வற்றைச் செய்ய, அவள் வளர்ந்து முதிர்ந்து தளர்கடை பயின்ருள். ஏழு ஆண்டு முதிர்ந்தவுடன் மற்றப் பெண் களுடன் கழல், அம்மனே, பந்து முதலிய விளையாடல்களே யும் பயின்ருள். பூம்பாவை எழிலிலும் குணத்திலும் வளர்ந்துவந்த தைக் கண்ட சிவகேசர், இவளே மணந்து கொள்ளும் ஆடவன் என் உடைமை முழுவதற்கும் உரியவனுவான்’ என்று எண்ணி மகிழ்ந்தார். ஞானசம்பந்தப் பெருமான் மதுரை சென்றதும், இறைவன் திருவருளால் பாண்டிய லுடைய வெப்பை நீக்கியதும், கனல் வாதம் புனல்வாதம் செய்து சமணர்களே வென்றதும் ஆகிய செய்திகளே வந்தவர் கூறக்கேட்டு மிக்க ஆனந்தம் அடைந்து, அவற் றைச் சொன்னவர்களுக்குப் பொன்னும் ஆடையும் அளித் தார். பின்பு ஞானசம்பந்தரை மனத்தில் தியானித்துத் திசை நோக்கித் தொழுது, 'யான் பெற்றெடுத்த பூம்பாவை யையும். என் விதியையும் என்னேயும் திருஞானசம்பந்த மூர்த்திக்கே அர்ப்பணம் செய்துவிட்டேன்” என்று மனமுருகிச் சொன்னர். பூம்பாவைக்குக் கன்னிமாடம் சமைத்து அதில் தோழி யருடன் இருந்து வரும்படி செய்தார் அவ்வணிகர். ஒரு நாள் அவ்விளம் பெண் சேடியருடன் புறத்தே உள்ள பூம்பொழிலுக்கு வந்து மலர் கொய்தபோது அவள் விரலில் ஒரு பாம்பு கடித்துவிட்டது. உடனே அவள் மயங்கி வீழ, அவளைத் தோழியர் தாங்கிக்கொண்டு மாளிகைக்குக் கொண்டு சென்றனர். அவள் கிலேயைக் கண்டு சிவநேசரும் அவருடைய சுற்றத்தாரும் பிறரும் மனம் பதைபதைத்து வருந்தினர். - . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/96&oldid=784102" இலிருந்து மீள்விக்கப்பட்டது