பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்பு பெண்ணுனது - 91 உடனே விடத்தைப் போக்குவதற்குரிய மந்திரவாதி களே அழைத்துவந்து மந்திரம் டோடச் செய்தார்.மருந்துகள் பலவற்றையும் மருத்துவர்கள் ஊட்டினர்கள். இவ்வளவு செய்தும் விடம் குறையாமல் தலைக்கு ஏறிவிட்டது. கடைசி யில் உடலினின்றும் உயிர் பிரிந்தது. மந்திரம் போட்டவர் கள், "இது விதி" என்று சொல்லிப் போய்விட்டார்கள். சுற்றத்தாரும் உற்றவர்களும் உயிரை இழந்த சடலத்தின் மேல் விழுந்து அலறிஞர்கள். சிவநேசர் மிக்க துயரத்தை அடைந்து, இனி என்ன செய்வதென்று யோசித்தார். 'இந்த விடத்தை யாரேனும் தீர்த்தால் அவருக்கு அளவில்லாத நிதியை வழங்குவேன்" என்று பறை அறைவித்தார். அன்று முதல் மூன்று நாட்கள் பல இடங்களிலுமுள்ள பலர் வந்து தம்மால் ஆன செய்கைகளைச் செய்தனர். யாவரும் தம் முயற்சி பலிக்கா மல் போயொழிந்தனர். அப்பால் அந்த வணிகர் அவள் உடலத்தை எரித்து விட்டுச் சாம்பரை ஒரு கும்பத்தில் சேமித்து வைத்து. 'ஆளுடைய பிள்ளையாருக்கு உரியவள் இவள் என்று முன்ப்ே சொல்லிவிட்டமையால், நமக்கு இதுபற்றித் துன்பம் இல்லை” என்று சொல்லி, அந்தக் கும்பத்தைக் கன்னிமாடத்தில் வைத்துக் காப்புச் செய்யலானர். அதற்கு ஆடை, அணிகலன் புனேந்து மாலையும் சக்தனமும் அணிந்தார். நாள் தோறும் திருமஞ்சனம் செய்து விளக் கெடுத்து கிவேதனம் செய்து போற்றி வந்தார். - இவ்வாறு இருக்கும்போது, திருஞான சம்பந்தப் பெருமான் திருவொற்றியூர் வந்து தங்கியிருப்பதை அங் கிருந்து வந்தவர்கள் அறிவித்தார்கள். அதுகேட்டு மகிழ்ந்த சிவநேசர் அவர்களுக்கு ஆடை பொன் ஆதியன அளித்து உடனே அவரை வரவேற்க எண்ணி அதற்கு ஆவன செய்யலானர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/97&oldid=784104" இலிருந்து மீள்விக்கப்பட்டது