பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்பு பெண்ணுனது 98. அப்போது தொண்டர்களும் பிறரும் அங்கே வந்து கூடினர். பிற சமயத்தினரும் என்ன நடக்கிறதென்று அறியும் ஆர்வத்துடன் வந்து குழுமினர். ஞானசம்பந்தர், 'உலகத்தில் பிறந்தவர்கள் பெறும் பயன் சிவபெருமான் அடியார்களுக்கு அமுது செய்வித் தலும், அப்பெருமானுடைய கல்விழாக் காண்பதும் என்பது உண்மையானல் உலகவர் முன் வருவாயாக’ என்று சொல்லி ஒரு திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினர். "மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும் அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல் கண்ணி ஞலவர் நல்விழாப் பெர்லிவுகண் டார்தல் உண்மை யாம்எனில் உலகர்முன் வருகென உரைப்பர்" என்று சேக்கிழார் பாடுகிரு.ர். பூம்பாவையை விளித்துப் பாடியதாக அமைந்தது. அந்தப் பதிகம். திருஞான சம்பந்தப் பெருமான் திரு. வாக்கால் விளித்துப் பாடிய பெருமையை உடையவர்கள் இரண்டு பெண்மணிகள். ஒருவர் மங்கையர்க்கரசியார். "மானினேர்விழி மாதராய்' என்று தொடங்கும் பதிகம் அவரை முன்னிலைப் படுத்திப் பாடியது. மற்ருெரு பெண் பம்பாவை. அந்தப் பதிகத்தின் முதல் பாசுரம் வருமாறு:

- புன்னையங் கானல் மடமயில்க் ساتشوتاما கட்டிட்டம் கொண்டான் கபாலிச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல்கணத்தார்க்கு. அட்டிட்டல் காணுதே போதியோ பூம்பாவ்ாய்! (தேன் உள்ள புன்னே மரம் நிறைந்த கடற்கரைச் சோலையில் மயிலாக வந்து வழிபட்ட உமாதேவியாரைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தைக் கொண்டான் கபாலீச்சரத்தில் எழுக் தருளிய சிவபெருமான். ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகும். குணமுள்ள சிவனடியார் கூட்டத்தினருக்கு அந்த விழாவில் இங்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/98&oldid=784106" இலிருந்து மீள்விக்கப்பட்டது