பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 திருஞான சம்பந்தர் குள்ள மக்கள் சமையல் செய்து விருந்து அருத்தி மாகேசுவர பூசை செய்வதைக் காணுமல் மறைந்து போகிருயா? பூம்பாவையே!) இவ்வாறு திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கி ஒவ் வொரு பாசுரமாகப் பாடப் பாட அந்தக் குடத்தில் மெல்ல மெல்லப் பூம்பாவை உருவம் பெறலாள்ை. எட்டுத் திருப் பாட்டு ஆனபோது குடம் உடைந்து பன்னிரண்டு வயசுடைய பெண்ணுக வளர்ந்து கிற்க, பின் பத்துப் பாட்டு ஆனவுடன் பேரழகுபெற்று கின்ருள். திருக்கடைக் காப்பையும் பாடிச் சம்பந்தர் பதிகத்தை கிறைவேற்றினர். உயிர்பெற்று எழுந்து கின்ற பெண்ணேக் கண்டு யாவரும் மகிழ்ச்சி யாரவாரம் செய்தனர். ஹர ஹர என்ற முழக்கம் பெருகியது. அழகுப் பிழம்பாக நின்ற பூம்பாவை இறைவனைப் பணிந்து சம்பந்தர் அடியில் விழுந்து பணிந்தாள். சிவகேசரும் பிறரும் அவர் காலில் விழுந்தனர். 'உங்கள் மகளே அழைத்துக்கொண்டு உங்கள். மாளிகைக்குப் போங்கள்" என்று சம்பந்தர் கூற, சிவகேசர் அவரை வணங்கி, "எம்பெருமானே, இவகளத் தேவரீர் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். அது கேட்ட சம்பந்தர், "ர்ே பெற்ற பெண் விடத்தில்ை இறந்துபோனள். இவள் இறைவன் திருவருளால் யான் காணத் தோன்றினள். இவளே மனத் தல் முறையாகாது" என்று கூறி ஆசி சொல்லி அவ்வணிகர், 'இவளை வேறு ஒருவருக்கு அளிக்க மாட்டேன்." என்று சொல்லி அழைத்துச் சென்ருர், பூம்பாவை தவம் செய்து வாழ்ந்தனள். - ஞானசம்பந்தப் பெருமான் இறைவனே வணங்கி மயிலாப்பூரிலிருந்து புறப்பட்டார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/99&oldid=784108" இலிருந்து மீள்விக்கப்பட்டது