பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:94 நாயன்மார் கதை

மனத்திலே தரிசிக்கவேண்டும்; அது கிலேயாக கிற்க வேண்டும். அதைத் தாரணை என்று சொல்வார்கள்.

சிவபெருமானுடைய திருவுருவத்தை மனத்திலே வைத்துப் பிற கினேவுகள் வாராமல் விலக்கி கிஷ்டாபரர் களாக இருக்கும் சிவ யோகியர்களுக்குத் தாரணை கைகூடும். பின்பு வேறு எந்த வகையான இடையீட்டா லும் அது மாருமல் கிற்கும். அந்தக் காட்சியிலே உறைந்து நிற்பதே தியானம். அப்பால் எல்லாம் மறந்து இன்புறல் சமாதி.

தாரண கைகூடிய சிவயோகியரைச் சித்தத்தைச் சிவன் பரலே வைத்தார் என்று சுங்தார் பாடினர். அவர்கள் ஆதாரங்கள் ஐந்திலும் உள்ள பஞ்சமூர்த்திகளின் பதங் களைக் கடந்து, அப்பால் ஆருவது ஆதாரமும் தாண்டிப் பூரண மெய்ச்சோதியாகப் பொலியும் துவாதசாங்த சிலை யில் மனத்தை நிறுத்துவார்கள். அவர்களுடைய சித்தம் சிதருமல் ஆடாமல் அசையாமல் விருத்தி அடங்கிக் கிடக்கும்.

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தாராகிய தொகையடி யர்களே நாமும் போற்றி வழிபடுவோமாக.

61. திருவாரூர்ப் பிறந்தார்

சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் கலங்களில் சில சில தலங்களுக்குச் சில சிறப்பு இயல்புகள் உண்டு. திரு வண்ணுமலே கினைக்க முத்தி தருவது என்பார்கள். காசி இறக்க முத்தி தருவது. அப்படியே திருவாரூர் என்ற தலம் பிறக்க முத்தி தருவது. அதாவது திருவாரூரில் பிறந் தாலேயே போதும்; முத்தி கிடைக்கும். இந்த கம்பிக்கை கொண்டு சைவர்கள் எல்லாரும் திருவாரூரைச் சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/100&oldid=585734" இலிருந்து மீள்விக்கப்பட்டது