பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நாயன்மார் கதை

உடைய எம்பெருமாட்டியின் மணவாளனாகிய எம்பெரு மான் தமிழ் நாட்டில் பல தலங்களில் எழுந்தருளி அடியார் களுக்கு அன்பு பாலிக்கிருன். அப்படி எழுந்தருளியுள்ள தலங்களில் திருவாரூர் ஒன்று. அந்தத் திருவாரூரில் பிறந்த வர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் திருத் தொண்டு என்னலே தேர்ந்து சொல்லத் தக்கதா?’ என்று சேக்கிழார் பாடுகிருர். திருக்கயிலாயத்தில் வீற்றி ருந்து, சிவபெருமானுடன் இருந்து அவன் தொண்டுகளைச் செய்யும் சிவகணத்தார்கள் மிக்க கீர்த்தியுள்ள திருவா ரூரில் பிறப்பார்கள். அவர்கள் தம்முடைய ஐந்து இந்திரி யங்களே அடக்கி வாழ்கிருர்கள். அவர்களுடைய பாதத்தை வணங்கினல் உயர்ந்த நெறி கைகூடும். இவ்வாறு திருவா ரூரில் பிறந்தார்களுடைய சிறப்பைச் சேக்கிழார் நாயனர் பாடியிருக்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/102&oldid=585736" இலிருந்து மீள்விக்கப்பட்டது