பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்க்க நாயனுர் 1I

அவர் இளம்பருவத்தில் சூதாடும் வித்தையைக் கற்றிருந்தார். அதில் பேராற்றல் உடையவராகவும் இருக் தார். இப்பொது அது கினேவுக்கு வந்தது. மீட்டும் சூதாடி அதனால் வரும் பொருளேக் கொண்டு அடியாருக்கு அ.மு. துரட்டலாம் என்று தீர்மானம் செய்தார். அவ்வாறு செய்யத் தொடங்கவே, அவரிடம் பொருள் சேர்ந்தது. அடியார் பசியைப் போக்கி வந்தார்.

அவருடன் பலர் சூதாடித் தோற்ருர்கள். அந்த ஊர்க்காரர் யாவரும் தோற்றனர். மேலே ஊரில் அவரோடு சூதாட வருவார் யாரும் இலராயினர். அதனே அறிந்த அவ் வன்பர், "இனி இவ்வூரில் இருந்து பயன் இல்லை” என்று எண்ணி, இறைவன் எழுங் தருளி யிருக்கும் தலங்களை நாடிச் சென்ருர். ஒர் ஊருக்குச் சென்று இறைவனைத் தரிசிப்பது, பிறகு அங்குள்ளாருடன் சூதாடுவது, அதனால் கிடைக்கும் பொருளைக் கொண்டு அடியார்களுக்கு அமுதுாட்டுவது, பிறகே தாம் உண்பதுஇப்படியாகச் சில காலம் செய்து வந்தார். பல ஊர்களுக் குச் சென்று அவ்வவ் வூர்களில் உள்ளாருடன் சூதாடி, பிறகு யாரும் அவருடன் ஆட வருவார் இல்லாமற் போகவே, வேறு ஊர்களுக்குப் போனர். ஏதேனும் பெரிய நகரமாக இருந்தால் அங்கேயே தங்கிவிடலாம் என்று எண்ணிய அவர் கடைசியில் திருக்குடங்தையை அடைக் தார். -

எவ்வளவு காலம் இருந்தாலும் சூதாடுவார் கிடைப் பார் என்ற நம்பிக்கை அங்கே உண்டாயிற்று. இப்போது ஒரு புதிய தந்திரத்தை அவர் மேற்கொண்டார். சூது ஆடும்போது முதல் ஆட்டத்தில் அவர் தோல்வி அடைவார். அப்போது அவருடன் ஆடுபவருக்கு ஊக்கம் உண்டாகி விடும். அடுத்த முறை பெரும் பணயத்தை வைப்பார். அந்த ஆட்டத்தில் அவர் வென்று விடுவார். இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/17&oldid=585650" இலிருந்து மீள்விக்கப்பட்டது