பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புலி நாயனுர் 17

'இன்மையால்சென்றிரந்தார்க்கில்லயென்ன தீத்துவக்கும்

தன்மையார் ஆக்கூர்’ என்றும், அடியாரை,

"பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர்சுமக்கும்

தன்னடியார் ஆக்கூர்” என்றும் சிறப்பித்திருக்கிரு.ர்.

நீர்வளமும் நீர்மை வளமும் மலிந்த அவ்வூரில் மறைய வர் குலத்தில் சிறப்புலியார் தோன்றினர். அவர் சிவபிரா னுக்குரிய தொண்டுகளே இயற்றுவதில் வல்லவராகவும் ஈகைத் திறத்தில் சிறந்தவராகவும் இருந்தார். இறைவ ணுடைய அடியார்கள் வந்தால் அவர்களே அடிபணிந்து முன் கின்று இனிய மொழிகளைக் கூறி, அவர்கள் இனிய உணவை உண்ணச் செய்வார். அவர்களுக்கு வேண்டிய பொருளையும் வழங்குவார்.

சிவ பக்திக்குரிய அடையாளங்களிலும் இயல்பிலும் அவர் சிறந்து கின்ருர். பூநீ பஞ்சாட்சரத்தைச் செபித்துத் தம் மரபுக்கு ஏற்ற வகையில் வேள்விகளே இயற்றி அதன் பயனேச் சிவபிரானுக்கே அர்ப்பணம் செய்தார். அடியார் களுக்கும், பிறருக்கும் கலம் புரிந்து தம் மரபிற்கு ஏற்ற அறங்களிலும் தலேகின்று வாழ்ந்த சிறப்புலியார் யாவரா ஆம் போற்றப் பெற்ருர். அறுபத்து மூன்று நாயன்மார் களுள் ஒருவராகச் சைவ உலகம் வழிபடும் கிலையை அடைந்தார்.

  • அஞ்செழுத் தோதி அங்கி

வேட்டுநல் வேள்வி எல்லாம் நஞ்சணி கண்டர் பாதம்

நண்ணிடச் செய்து ஞாலத் தெஞ்சலில் அடியார்க் கென்றும்

இடையரு அன்பால் வள்ளல் நா. க-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/23&oldid=585656" இலிருந்து மீள்விக்கப்பட்டது