பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:18 நாயன்மார் கதை

தஞ்செயல் வாய்ப்ப ஈசன்

தாள்நிழல் தங்கி ளுரே ' என்று இவருடைய புகழைச் சேக்கிழார் பாடியுள்ளார்.

36. சிறுத்தொண்ட காயர்ை

சோழ நாடு என்ருல் நீர் வளம் சிலவளத்துக்குக் கேட்கவேண்டுமா? திருச்செங்காட்டங்குடி காவேரித் திருநாட்டில் உள்ளது என்று சொன்னலே போதும்; அதன் வளத்தைத் தனியே எடுத்துச் சொல்ல வேண்டாம்.

அந்த ஊரில் பரம்பரை பரம்பரையாக அரசனுக்கு மந்திரியாகவும் சேனைத் தலைவராகவும் உள்ள மாமாத்திரர் குலத்தில் உதித்தவர் பரஞ்சோதியார் என்னும் சிவபக்தர். வடமொழித் தேர்ச்சியும் உள்ளவர். படைக்கலப் பயிற்சி, ஆனேயேற்றம், குதிரையேற்றம் ஆகியவற்றிலும் அவர் பேராற்றல் உடையவராக விளங்கினர்.

இத்தனை கலைகளிலும் பயின்று திறல்பெற்ற அவ ருடைய உள்ளம் எப்போதும் சிவன் கழலையே சிந்திக்கும் இயல்புடையதாக இருந்தது. சிவனடியார்களிடம் பெரு மதிப்பு வைத்து வழிபட்டு அடியார் தொண்டினும் சிறந்து கின் முர். அரசனுக்கு அவர் மிக நெருங்கியவராய், அவருக்கு வேண்டும்போ தெல்லாம் துணையாகச் சென்று போர் செய்து பகைஞரைப் புறங்கண்டு வருவார். ஒரு முறை வடக்கே வாதாவிக்குச் சென்று அங்குள்ள மன்னரைப் போரில் வென்று அங்குள்ள விதிக் குவை களைச் சோழ நாட்டுக்குக் கொண்டுவந்து அரசன் முன் வைத்தார். வடபுல மன்னன் படைப்பலம் மிகுதியாக உடையவன். அவ்வளவு பெரிய மன்னனைப் பொருது வென்று வந்த பரஞ்சோதியாரைச் சோழ மன்னனும் பிறரும் பாராட்டினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/24&oldid=585657" இலிருந்து மீள்விக்கப்பட்டது