பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுத்தொண்டி நாயனுர் 21.

அடங்கி ஒடுங்கியிருத்தலேக் கண்டவர்கள் அவரைச் சிறுத் தொண்டர் என்று அழைக்கத் தலைப்பட்டனர்.

இறைவன் திருவருளால் சிறுத் தொண்டருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்குச் சீராளன் என்று திரு காமம் புனைந்து மிகச் செல்வமாக வளர்த்து வந்தார். அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்ற சிறப்புகளைச் செய்து குழந்தையைச் சிறுத்தொண்டரும் அவர் மனேவியாரும் வளர்த்து வந்தனர். சீராளன் பள்ளிக்குச் செல்லும் பருவத்தை அடையவே, பெற்ருேர் அவனைப் பள்ளியிற் சேர்த்து, அவன் கல்வியிற் சிறந்து வளர்வதை அறிந்து இன்புற்றனர். -

இவ்வாறு இருக்கையில், திருஞான சம்பந்தமூர்த்தி காயனர் ஒரு முறை அந்தத் தலத்திற்கு எழுந்தருளினர். அவரை வணங்கி வழிபட்டு அன்பு செய்து இன்புற்ருர் சிறுத்தொண்டர். சம்பந்தப் பெருமான் சிறுத்தொண்ட ரைத் தம் திருப்பதிகத்தினிடையே சிறப்பித்துப் பாடிச் சில நாள் அங்கே தங்கிப் புறப்பட்டார்.

சிவபெருமான் சிறுத்தொண்டருடைய அன்பை நுகர் வதற்கும் அவருடைய பெருமையை உலகம் அறியும்படி செய்வதற்கும் திருவுளங்கொண்டான் ; பைரவத் திருக் கோலம் பூண்டு திருச்செங்காட்டங்குடியை அடைந்தான்.

சிறுத்தொண்டருடைய வீட்டைத் தேடிச் சென்ற பைரவர் அவர் வீட்டுக்குள் புகுந்து, "சிவனடியவருக்கு உணவளிக்கும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிருரோ?” என்று கேட்டார். அப்போது அவ்வீட்டில் எவல்புரியும் சந்தனமென்னும் பெயருடைய கங்கை அவரைக் கண்டு, சிவனடியார் என்றறிந்து வணங்கி, "அவர் சிவனடியார் களைத் தேடிக்கொண்டுதான் போயிருக்கிருர். வந்துவிடு வார். தாங்கள் உள்ளே எழுந்தருள வேண்டும்” என்று கூறினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/27&oldid=585660" இலிருந்து மீள்விக்கப்பட்டது