பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நாயன் மார் கதை

'இவ்வடியார் அமுது செய்ய எத்தனே தாமதம்!" என்று கருதிச் சிறுத்தொண்டர் தம் மகன் வியாரோடு புறம் போந்து தம் குழந்தையை அழைப்பவரைப் போலப் பாவனை செய்யத் தொடங்கி, 'மைந்தா, வா' என்று அழைத்தார். அவர் மனைவியாரும், செய்ய மணியே, சீராளா, நாம் உய்யச் சிவனடியார் உடனுண்ண அழைக் கின்ருர், வா அப்பா' என்று உரக்க அழைத்தார்.

என்ன ஆச்சரியம்! இறைவன் திருவருளால் குழந்தை சீராளன் பள்ளிக்கூடத்திலிருந்து ஒடி வருபவனைப்போல வந்தான். அவனை அம்மையார் எடுத்தணைத்துக் கணவர் கையில் கொடுக்க அவர், 'அடியார் உண்ணும் பேறு நமக்குக் கிடைக்கும்' என்ற பேருவகையோடு அவனேக் கையில் வாங்கிக் கொண்டார். தாம் அரிந்த மகன் வந்தானே என்ற வியப்போ, அவன் எவ்வாறு வந்தான் என்ற ஆராய்ச்சியோ அவருக்கு அப்போது தோன்றவில்லை. அடியார் ஏதேனும் காரணம் கூறி அமுது செய்யாமல் போய்விடுவாரோ என்று ஏங்கி கின்ற அவருக்கு, "இப் போது அவர் அமுது செய்வார் " என்ற நம்பிக்கையும் அதல்ை உவகையும் உண்டாயின.

அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு இல்லத்துள் சென்று பார்க்க, அங்கே அடியாரைக் காணவில்லை. பரி கலத்தில் இட்ட கறியையும் காணவில்லை. சிறுத்தொண்டர் ஒன்றும் தெளியாமல் கலங்கி வீழ்ந்து கைந்தார். "ஐயோ! வந்த அடியார் அமுது செய்யாமல் எங்கே போனர்?" எனத் தேடி மயங்கி வெளியே வரும்போது, வானில் இறை வன் உமாதேவியாரோடும் குழந்தைப் பிரானகிய முருக ைேடும் காட்சி அளித்தான். அந்த மூவரையும் அடியாரும் மனைவியாரும் சீராளனுமாகிய மூவரும் தொழுது பரவச மாகி ஏத்தினர்கள். அம்மூவருக்கும் சந்தன. கங்கைக்கும் இறைவன் திருவருள் புரிந்து வாழ்வித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/32&oldid=585665" இலிருந்து மீள்விக்கப்பட்டது