பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயனுர் 27

எல்லாப் பற்றையும் விட்டு அடியாரைப் பேணுவதே பயனென்று அதற்காக இல்வாழ்வில் வாழ்ந்து, மைந்தனை யும் தம் கையால் அரிந்து கறி சமைக்கச் செய்த சிறுத் தொண்டருடைய பக்தியின் முறுகிய விலையைத் தெளிவது மிக மிக அருமை. புறப்பகையை வென்று அவர் பெற்ற புகழ் பெரிது அன்று: அகப்பகையை வென்று கின்ற அவர், இறைவன்பாற் பெற்ற திருவருள் பெரிது.

37. சேரமான் பெருமாள் நாயனர்

மேல் கடற்கரையில் கொடுங்கோளுர் என்ற ஊர் ஒன்று உள்ளது. அதற்கருகே திருவஞ்சைக்களம் என்ற திருப்பதி இருக்கிறது. கொடுங்கோளுரை இப்போது கொடுங்கல்லூர் என்றும், திருவஞ்சைக்களத்தை திருவஞ் சிக்குளம் என்றும் வழங்குவர். கொடுங்கோளுருக்கு மகோதை யென்றும் ஒரு பெயர் உண்டு. பழங்காலத்தில் சேரமன்னர் தம்முடைய ஆட்சித் தலைநகராகக் கொடுங் கோளுரையே கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் அவ்வூருக்கு வஞ்சியென்ற பெயரே வழங்கி வந்தது.

சேரர் குலத்துப் பிறந்த பெருமாக் கோதையார் என்ப வர் இறைவனிடம் ஆராத காதல் உடையவராக இருந்தார். திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே வணங்கி அக்கோயிலில் உரிய தொண்டுகளேச் செய்து அவனடியே நினைந்து வாழ்ந்து வந்தார். -

அக்காலத்தில் கொடுங்கோளுரில் அரசாண்டு வந்த சேரமன்னர் துறவு பூண்டு அரசு துறந்து போய்விட்டார். அதனால் அமைச்சர் முதலியோர் பெருமாக் கோதையாரிடம் வந்து, தேவரீர் உரிமையுடையவராதலின் சேர நாட்டின் ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்" என்று பணிந்து விண்ணப்பம் செய்தனர். "இறைவன் திருவுள்ளம் அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/33&oldid=585666" இலிருந்து மீள்விக்கப்பட்டது