பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நாயன்மார் கதை

தில்லைவாழ் அந்தணர்களில் பல்லோர் சோழ நாட்டை விட்டுப் போனதற்குக் காரணம் இன்னதென்று தெரி யாமல் மயங்கினர் நாயனார். தில்லைவாழ் அந்தணர்கள் பொன் முடியைச் சூட்டாவிட்டாலும் அவர்களுள் முதல் வகிைய அம்பலவாணனுடைய அடியாகிய நன்முடியைச் சூட்டிக் கொள்வேன்' என்று எண்ணிய அவர் நடராசப் பெருமானே வணங்கி, "நீயே கின் அடி.யை எனக்கு முடி யாகச் சூட்டியருள வேண்டும்” என்று மனமுருகி வேண் டிக் கொண்டார். இதே நினைவாக இருந்த கூற்றுவ ாாயனர் அன்று துயின்றபொழுது அம்பலவாணன் அவர் கனவில் எழுந்தருளினன். தன்னுடைய அடியாரின் விருப் பப்படியே அவருடைய சென்னிமிசைத் திருவடியைச் சூட் டின்ை.

உடனே விழித்துணர்ந்த நாயனர் தாம் பெற்ற பேற்றை எண்ணி வியந்தார்; இறைவன் திருவருளே எண்ணி எண்ணி உருகினர். தாம் வேண்டியதைப் பிற அந்தணர்கள் செய்யாமல் இருக்க, முதல் அந்தணனாகிய இறைவன் தம் விருப்பம் அறிந்து கிறைவேற்றியதை கினைந்து நெகிழ்ந்து பரவினர்.

அப்பால் தில்லை வாழந்தணர்களுக்கு ஒலே போக்கி, அவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டாமென்று உறுதி கூறி அவர்களே வருவித்து வழிபட்டார். அவர்கள் கூற்றுவ காயருைக்கு இறைவன் அருள் செய்த திறத்தை உணர்ந்து, அவரிடம் இருந்த அச்சத்தை ஒழித்து அன்பு பூண்டனர். -

தலங்தோறும் சென்று அங்கங்கே சிறப்பாகப் பூசை வழிபாடுகளே நடத்தி இன்புற்று வாழ்ந்த கூற்றுவநாயனர் இறுதியில் உமையாள் கணவன் திருவடியை அடைந்து மீளா மாளா இன்பங்கில பெற்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/42&oldid=585675" இலிருந்து மீள்விக்கப்பட்டது