பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நாயன்மார் கதை

41. புகழ்ச்சோழ நாயனர்

சோழநாட்டின் தலைநகரம் உறையூர், செல்வம் கொழிக்கும் திருநகரம் அது. அங்குள்ள கடைவீதிகளில் எல்லா நாடுகளிலிருந்தும் வந்துள்ள பண்டங்கள் கிரம்பி யிருக்கும். யாக்னப்பந்திகளும் குதிரைக் கொட்டடிகளும் பல அங்கங்கே இருந்தன. கார் ஏறும் கோபுரங்களும் கதிர் ஏறும் மலர்ச்சோலைகளும் தேர் ஏறும் மணி வீதிகளும் உடைய உறையூரின் புகழ் உலகம் எங்கணும் பரவியது. அந்த நகரத்தில் சோழகுலப் பெருமன்னராக இருந்து அரசாண்டார் புகழ்ச்சோழர் என்பவர். அவர் தம்முடைய தோள் வலியினல் பகை மன்னர்களே அடக்கி அவர்களைத் திறையளிக்கப் பணித்து, மன்னர் மன்னராகச் சேங்கோல் ஒச்சி வந்தார்.

சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டவர் அவர். ஆலயங்களிலெல்லாம் என்ருகப் பூசை முதலியன நடை பெறும்படி வேண்டியன அளித்துப் பாதுகாத்தார். சிவ னடியார்கள் யாரேனும் வந்தால் அவர்களுக்கு வேண்டுவன அளிப்பார். அவர்களிடம் குறையிரக்து சிற்பார்போலப் பணிந்து ஒழுகி அவர்கள் குறிப்பை அறிந்து வேண்டும் பொருளேக் கொடுப்பார். ஒரு பொருளே ஒருவனிடம் பெற எண்ணிய இரவலன் அவனிடம் சென்று குறையிரத்து கிற் பதே உலகத்தின் பெருவழக்கு. ஆனல் புகழ்ச்சோழரோ தாம் கொடுக்கவேண்டியவற்றை,குறையுடையர் ஒருவரைப் போலப் பணிந்து கின்று அடியவர்களுக்குக் கொடுப்பார். தொண்டர்களிடம் அவருக்கு இருந்த பெருமதிப்பும் அன் புமே அதற்குக் காரணம். .

அவர் கொங்குகாட்டரசரும் மேற்குத் திசையில் உள்ள பிறநாட்டு அரசர்களும் தம்முடைய திறைகளைக் கொண்டு வந்து கொடுக்க வசதியாகக் கருவூர் என்னும் ககரத்துக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/46&oldid=585680" இலிருந்து மீள்விக்கப்பட்டது