பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதித்த நாயனும் 47

அந்த அடியார் ஒரு சிறந்த கொள்கையை மேற்கொண் டிருந்தார். வலையில் அகப்படும் முதல் மீனே, "இது சிவபெருமானுக்கு உரியது' என்று கடலிலே விட்டுவிடு வது அவர் வழக்கம். தமிழ் காட்டில் உள்ளவர்கள் முத லில் உண்டாகும் விளைபொருளே இறைவனுக் கென்று வழங்கி விடுவது மரபு. காயோ, கனியோ, நெல்லோ, புல்லோ எதுவானுலும் முதலில் விளங்ததைத் தனியே எடுத்து இறைவனுக்கென்று வைத்து விடுவார்கள். அந்த முறையில் அதிபத்தர் முதல் மீனே இறைவனுக்கென்று கூறிக் கடலில் விட்டுவிடச் செய்தார். .

எவ்வளவு குறைவாக மீன் கிடைத்தாலும், முதலில் கிடைக்கும் மீன் மிகப் பெரியதாக இருந்தாலும், அந்த மீனக் கடலில் விட்டு விடுவார். ஒரே ஒரு மீன் மாத்திரம் ஒருநாள் கிடைத்தால் அதை இறைவனுக்கென்று விட்டு விட்டு வெறுங் கையோடு வருவார். எந்த வகையிலும் தம் முடைய விரதம் மாருமல் ஒழுகி வந்தார் அவர்.

இப்படி இருக்கையில் இறைவன் செய்த சோதனை யினல் தொடர்ந்து பல நாட்கள் ஒரு மீனே கிடைத்து வந்தது. அவர் அதைக் கடலிலே விட்டுவிட்டு வெறுங் கையோடு வீட்டுக்கு வந்தார். வலைவளம் சுருங்கியமை யாலும், தாம் பெற்ற ஒரு மீனேயும் விட்டுவிட்டு வந்தமை யாலும் அவருடைய செல்வம் கரைந்தது. உறவினர் களுக்கு வேண்டியவை அளித்துப் பாதுகாத்தார். நாளடை வில் பொருள் கரைந்து உணவு பெற இயலாத வறுமை வந்து அடைந்தது. தம்முடைய வீட்டில் உள்ள மனேவி மக்கள் பட்டினியால் சாம்புவதை அறிந்தும், அவர் தம் முடைய கொள்கையினின்றும் வழுவவில்லை. ஒவ்வொரு நாளும் கிடைத்த ஒற்றை மீனைச் சிவபெருமானுக்கு என்று விட்டு வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/53&oldid=585687" இலிருந்து மீள்விக்கப்பட்டது