பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிய நாயனுர் #1

தாமே எல்லா அடியார்களுக்கும் அமுது பரிமாறி உபசரித்தார்.

தாம் செய்யும் அறத்துக்குத் துணையாக கிற்கவேண் டிய தம் மனேவி அடியார் பெருமையை உணராமல் புறக் கணித்தமையால், கலிக்கம்பர் தம் காதல் மனேவி என்றும் பாராமல் கையைத் தறித்தார். அடியார்களிடம் அவருக் கிருந்த பேரன்பு மனைவியிடம் இருந்த காதலைவிடச் சிறந்து கின்றது. இத்தனே காலம் தம்முடன் பழகியும் தம் மனே விக்கு இத்தகைய வேற்றுமை உணர்வு வந்ததே என்ற எண்ணத்தால் அவளே ஒறுத்தார்.

முன்னேங்கில எதுவாக இருத்தாலும், சிவனடியாரான பிறகு எவரும் ஒத்த கிலேயையே அடைகிருர்கள். பல காலம் அடைத்துக் கிடந்த அறையானலும், ஒரு நாள் மூடி யிருந்த அறையானலும் விளக்கு ஏற்றியவுடன் அங்குள்ள இருள் உடனே நீங்கிவிடும். அவ்வாறே இறைவன்பால் அடிமை புகுவார்களினிடையே அதற்கு முன்பு முயற்சி யிலும் கிலேயிலும் வேறுபாடுகள் இருந்தாலும், சிவபிரா னிடத்து அன்பு முதிர்ந்து தொண்டராகிவிட்டால் யாவரும் ஒரே நிலையை அடைகிருர்கள். இதனை உணர்ந்த பெரி யோர்கள் அவருக்குள் வேறுபாடு கினேயாமல் யாவரையும் சிவபெருமானகவே பாவித்து வழிபட்டு இன்புறுவார்கள். இதனைத் தம் வாழ்க்கையில் மேற்கொண்டு சிறந்து கின்றவர் கலிக்கம்ப நாயனுர்.

45. கலிய நாயனுர்

எழுத்தறியும் பெருமான் எழுந்தருளி யிருப்பது திருவொற்றியூர். தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலம் அது. கெடு வீதிகளும் மாளிகைகளுமாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/57&oldid=585691" இலிருந்து மீள்விக்கப்பட்டது