பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிய நாயனுர் 53

தாமாக எள்ளாட்டி எண்ணெய் எடுத்து ஆலயத்தில் விளக்கு வைக்கும் திருப்பணி தொடர்ந்து நடைபெறுவது அரிதாயிற்று. அவர் பிறரிடம் எண்ணெய் வாங்கி விற்று, அதில் கிடைக்கும் லாபத்திற்கு வரும் எண்ணெயைக் கொண்டு விளக்கேற்றி வந்தார்.

நாளடைவில் இந்தப் பிழைப்பிலும் முட்டுப்பாடு உண்டாயிற்று. செக்கு ஒட்டும் ஏவலாளாக வேலை செய்து கூலி பெற்றுத் தம் திருத்தொண்டைச் செய்து வந்தார். அதன் பின்பு அந்தக் கூலி வேலையும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவரைவிடத் திறம்பட வேலை செய்யும் மக்கள் பலர் வந்தார்கள். செல்வத்திலே வளர்ந்த அவரால் அவர்களைப் போல வேலை செய்ய முடியவில்லை. ஆதலின் கூலி வேலைகூட அவருக்குக் கிடைக்கவில்லை.

வேறு வகை ஒன்றும் காணுராகித் தம்மிடம் உள்ள பண்டங்களே ஒவ்வொன்ருக விற்று, எண்ணெய் வாங்கித் திருவிளக்கு எரித்தார். பண்டங்கள் இல்லையாகவே, கடைசியில் தம்முடைய வீட்டையே விற்றுச் சில நாட்கள் தம் தொண்டை சிறுத்தாமல் நடத்தினர். வீட்டை விற்ற பொருள் எத்தனை நாளேக்கு வரும்? யாரோ ஒருவன் பரிகாசமாக, "இனிமேல் பெண்டாட்டியைத்தான் விற்க வேண்டும்' என்று கூறிக்கொண்டே போனது அவர் காதில் விழுந்தது. அவன் பரிகாசமாகச் சொல்கிருன் என்று அவர் நினைக்கவில்லை. இறைவனே தமக்கு வழி காட்டுகிருன் என்று எண்ணிக் கொண்டார். அரிச்சந்திரன் தன் மனைவியை விற்கவில்லையா? எல்லாம் அறிந்த, தர்மபுத்திரர் தம் மனைவியைச் சூதாட்டத்தில் பணயமாக வைக்கவில்லையா? ஆகவே தாமும் தம் மனைவியை விற்க லாம் என்று துணிந்தார் அவர்.

இறைவனுடைய திருத்தொண்டு ஒன்றையே அவர் தம் வாழ்க்கையின் பயனகக் கொண்டிருந்தார். மற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/59&oldid=585693" இலிருந்து மீள்விக்கப்பட்டது