பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நாயன்மார் கதை

கோயிலே அடைந்து தம்மால் இயன்ற பணிகளைச் செய் தார். தமிழ்ப் புலமை படைத்தவராதலினல் ஒவ்வொரு தலத்துக்கும் ஒவ்வொரு வெண்பாவைப் பாடி வழிபடும் வழக்கத்தை மேற்கொண்டார்.

பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரம் சென்று அங்கே திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் ஐயனேத் தரிசித்துக் கண்ணிர் வார கின்ருர். உணர்ச்சி வசப்பட்டுக் கூத்தாடும் ஐயனைப் பாடலானர்.

உலகில் கைகால் வலிமை உடையனவாக ஒடியாடித் திரிந்தால் உற்ருரும் உறவினரும் நம்முடன் இருந்து செயல்புரிவார்கள். நம்ம்ால் பெறும் உதவி இருந்தால் அவர்களும் உதவி புரிய வருவார்கள். அந்த விலை மாறி வயசு எறி ஆட்டம்பாட்டம் குறைந்து ஒட்டம் கின்ருல், உற்ருர் நம்மைக் கண்டு முகத்தைக் கோணிக் கொள்வார் கள். வரவரக் கிழத்தன்மையும் வந்து அடையும். கரை திரை மூப்பு ஆகியவை வந்தால் அடுத்தபடி வருவது மரணங்தான். எவ்வளவு ஆற்றலும் அழகும் உடைய உடம்பானலும் அது மூப்பில்ை தளர்த்து போகும். மரணம் வந்தால் அந்த உடம்பை யாரும் விரும்பமாட் டார்கள். அது வரைக்கும் கல்ல அச்சாகக் குடும்பமென் னும் தேரைத் தாங்கி ஒட்டியிருந்தாலும் அது இற்றுப் போயிற்றென்ருல், ஒருநாள் வீட்டில் வைத்திருக்கமாட் டார்கள். வெறும் வெளியாகிய மயானத்துக்குக் கொண்டு. போய்ச் சுட்டு விடுவார்கள்.

இந்த முடிவு, உடம்பெடுத்த எல்லோருக்கும் பொது வானது. உடம்பும் உயிரும் இணைந்து வாழும் மட்டும் அவர் வாழ்க்கையில் வேறுபாடு இருக்கலாம். உடம்பின் ஆற்றலிலும் அழகிலும் அதற்கு ஊட்டும் உணவிலும் உடுக்கும் உடையிலும் வேறுபாடு இருக்கலாம். ஆனல் பிணமாகிவிட்டால் எல்லா உடம்பும் பிணமே, மயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/64&oldid=585698" இலிருந்து மீள்விக்கப்பட்டது