பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனம்புல்ல நாயனுர் 6盘

பெருமான் ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் தில்லைப்பதியிலுள்ள திருச்சிற்றம்பலத்தையே, சேர் - போய் அடைந்து வழிபட்டு உய்வாயாக..}

இவ்வாறு பாடிய ஐயடிகள் தில்லையில் சில நாட்கள் தங்கி இறைவனே வழிபட்டு இன்புற்ருர். பின்பு ஏனேத் தலங்களுக்கும் செல்லும் வேட்கை உந்த அங்கிருந்து புறப் பட்டு எம்பெருமான் திருக்கோயில் கொண்ட இடங்களுக் கெல்லாம் சென்ருர்; தம்மால் இயன்ற சிவத்தொண்டு. களேப் புரிந்தார்; இனிய வெண்பாக்களே மொழிந்தார். இவ்வாறே தொண்டு புரிந்து வாழ்வு முழுவதும் நிறைவுடை யவராகி வாழ்ந்து இறைவன் திருவடி கீழலே அடைந்தார்.

அவர் பாடிய வெண்பாக்கள் க்ஷேத்திரத் திருவெண்பா என்ற பெயரில் தொகுக்கப் பெற்றுப் பதினேராங் திரு. முறையில் சேர்க்கப் பெற்றுள்ளன.

48. கணம்புல்ல நாயனர்

இறைவனுடைய திருக்கோயிலில் அவரவர்கள் ஆற்ற லுக்கு ஏற்ற வகையில் செய்வதற்குரிய திருப்பணிகள் உண்டு. பொருளுடையார் அப்பொருள் கொண்டு பல கிவந்தங்களே அமைக்கலாம். புதிய மூர்த்திகளே கிறுவி வழிபாடு கடக்கச் செய்யலாம். கோயிலில் புதிய மண்ட பங்களே அமைக்கலாம். கந்தவனம் அமைக்கலாம். மிகுதி யான பொருள் உதவ வசதி இல்லாதவர்கள் பூசைக்குரிய பண்டங்களை அளிக்கலாம். திருவாபரணம், பரிவட்டம், பாத்திரம் ஆதியன கொடுக்கலாம். திருவிளக்கு ஏற்ற லாம். பொருளே இல்லாதவர்கள் கோயிலேப் பெருக்கலாம்: மெழுகலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/67&oldid=585701" இலிருந்து மீள்விக்கப்பட்டது