பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனயடுவார் நாயனுர் 71.

கக் காரணமாக இருந்தது. அவனுடைய வீரத்தைவிட வண்மையே சிறந்து கின்றது. அதனால் அவனேக் கடை யெழு வள்ளல்களில் ஒருவகை வைத்துப் பாராட்டினர் கள் சான்ருேர்கள்.

இதே முறையில் ஒரு காயனர் வாழ்க்தார். காரி புலவர் களுக்கு ஈந்து வள்ளலென்னும் பெயர் பெற்ருன். இந்த நாயனரோ சிவனடியார்களுக்கு வழங்கி நாயன்மார் களுக்குள் ஒருவரானர்.

சோழவள நாட்டில் பாடல் பெற்ற சிவத் தலங்களில் ஒன்று நீடூர். சோலேவளம், வயல்வளம், நீர்வளம் நிரம்பியது அவ்வூர். அங்கே வேளாளர்களுக்குத் தலைவராக ஒரு பெருமகனுர் இருந்து வந்தார். அவர் பெரிய வீரர். சிவனடியாராகவே தோற்றம் அளிப்பார். சிவபெருமா னுடைய திருவடியாராகச் சிறந்து கின்று அடியார் களுக்கு வேண்டும் பொருள்களே வழங்குவதில் இன்பம்

& GÖØT -- if ff » . - -

தம்முடைய பகைவர்களோடு போரிட்டு எதிர்விற்க மாட்டாமல் தோல்வியுற்ற மன்னர்கள் அவரிடம் வந்து தமக்குத் துணையாக வரவேண்டுமென்று வேண்டுவார்கள். அவருக்கு இத்தனே ஊதியம் தருவோம் என்று பேசுவார் கள். அவர் தம் நண்பர்களேக் கூட்டிக் கூலிப்படையாகச் சென்று அவர்களின் சார்பில் போரிட்டு வெற்றி பெறச் செய்வார். அதனுல் இன்புற்ற மன்னர்கள் அவருக்கு கிதியமும் பிற பொருளும் வழங்குவார்கள்.

அவற்றை எடுத்து வந்து தம் ஊரை அடைந்து அடி யார்கள் உள்ளங்குளிர அவற்றை வழங்குவார். அவர்களே வரவேற்று உபசரித்து விருந்து அருத்தி வழிபடுவார். அவரு டைய வீரம் மன்னர்களால் பாராட்டப் பெற்றது; அவரது வண்மை அடியார்களின் புகழுக்கு உரியதாயிற்று; அவர் சிவபக்தி மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/77&oldid=585711" இலிருந்து மீள்விக்கப்பட்டது