பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நாயன்மார் கதை

மிகச் சிறந்தவர்களாக விளங்கும் பெரியவர்களே இயற்பெயரிட்டு அழைப்பது மரியாதைக் குறைவு என்று பழங்காலத்தில் கினைத்தார்கள். வேறு ஏதேனும் காரணப் பெயரிட்டுக் கூறுவார்கள். நாளடைவில் அவர்களுடைய இயற்பெயர் வழக்கற்றுப்போக, பின்னலே வந்த சிறப்புப் பெயரே விலைத்துவிடும். பல புலவர்களின் இயற்பெயர்கள் நமக்குத் தெரியாததற்கு இதுவே காரணம்.

இந்த நாயனருடைய இயற்பெயரும் அந்த முறையில் வழக்கில் இல்லாமல் போயிற்று. போர்முனேயில் எதிரி களே அடுவதை ஒரு தொழிலாக ஏற்று, அதனல் வரும் ஊதியத்தைக்கொண்டு அடியார்களே உபசரிக்கும் தொண்டு செய்து வந்தவர் அவர். ஆதலின் அவருடைய தொழிலால் யாவரும் முனையடுவார் என்று அவரைக் குறிப்பிட்டு வழங்க லாயினர். பிறகு இயற்பெயர் மறைய, அதுவே கிலேத்து விட்டது. இன்று முனையடுவார் நாயனர் என்பதே திருத் தொண்டத் தொகை முதலியவற்றில் பதிந்து விட்டது.

வீரத்தால் பொருள் விளேத்து, அப்பொருளால் சிவ

புண்ணியம் விளேத்த முனையடுவார், மன்னரும் அடியரும் போற்ற நெடுநாள் வாழ்ந்தார். அவருடைய தொடர்பால் வெறும் கூலிப்படையாக இருந்த வீரர்களும் இறைபணிப் படையினராகும் புண்ணியப் பேற்றை அடைந்தனர்.

53. கழற்சிங்க நாயனர்

காஞ்சிமா நகரில் பல்லவகுல மன்னர்கள் இருந்து பேரரசுரிமை தாங்கிப் புரந்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் கழற்சிங்கர். வீரத்தில் மிக்க அம் மன்னர் சிவ பக்தியிலும் சிறந்து விளங்கினர். போர்க்களத்தில் வீரம் விளங்கியது; எனய இடங்களில் அவருடைய பக்தி பொலிவு பெற்றது. வடகாடு சென்று ஆங்குள்ள மன்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/78&oldid=585712" இலிருந்து மீள்விக்கப்பட்டது