பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடங்கழி நாயனுர் դդ

தரும நெறியும் தழைப்பதற்குரிய திருத்தொண்டு பல வற்றை ஆற்றினர். சிவபெருமான் எழுந்தருளிய கோயில் களிலெல்லாம் பூசையும் விழாவும் விதிப்படி நடைபெறும் படி செய்துவந்தார். -

அக்காலத்தில் அவ்வூரில் ஒரு சிவனடியார் சிவத் தொண்டர்களுக்கு நாள்தோறும் அமுதளித்து வழிபடு வதை மேற்கொண்டிருந்தார். தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு இந்த அறத்தை முட்டாமல் கடத்திவந்தார். ஒரு நாள் அடியவர்களுக்கு அமுதருத்துவதற்குரிய பண்டங்கள் பெறும் கிலேயில் அவர் இல்லை. போதிய பொருளும் இல்லை; பண்டமும் இல்லை. நாளே வரும் தொண்டர்களுக்கு. எப்படி அமுதளிப்பேன்! என்று அவர் கவலையுற்று வாடினர்.

அப்போது அவருக்குத் திடீரென்று ஒரு யோசனை உண்டாயிற்று. அரசருடைய களஞ்சியத்தில் பல ஊர்களி விருந்துவந்த நெல்லைச் சேமித்து வைத்திருந்தார்கள். இதை அறிந்தவர் அங்க அன்பர். இது செய்வது முறையா, அன்ரு. என்றும் யோசிக்காமல், அவர் அன்று நள்ளிரவில் அரசர் பண்டாரத்தில் புகுந்தார். அங்குள்ள நெற்கூட்டில் உள்ள நெல்லேத் திருடத் தொடங்கினர். -

இந்தத் தொழிலில் பழகியவராக இருந்தால் அவர் தம் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இன்றுதான் ஏதோ தோன்றிற்று; இவ்வாறு செய்யலானர். அப்போது அங்கே காவல் காத்து கின்றவர்கள் அவரைக் கையும். களவுமாகப் பிடித்துக் கொண்டார்கள். அப்படியே அரசர் முன் கொண்டுவந்து நிறுத்தினர்கள்.

"ஏன் நீ கெல்லேத் திருடிய்ை?" என்று அரசர் கேட்டார். -

'சிவனடியார்களுக்கு நாள்தோறும் அமுது செய்விப் பதை என் கடமையாகக் கொண்டிருக்கிறேன். அந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/83&oldid=585717" இலிருந்து மீள்விக்கப்பட்டது