பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நாயன்மார் கதை

காரணம் பக்தி. சிவபக்தருக்குத் தீங்கு விளேத்தமையால் அவர் விளைத்தவர்களைத் தடிந்தார். சிவபக்தியுலகத்தில் உள்ள தனியாட்சித் தண்டனே அது என்று அவருக்குத் தோன்றியது. தம்மை அரசன் தாக்கில் ஏற்றியிருந்தாலும் அதுபற்றி அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார்.

தம் உடல், பொருள், உயிர் மூன்றையும் வழங்கும் தியாகபுத்தி உடையவர்கள் நாயன்மார்கள். அடியார் நலன் கருதிச் செய்யத் தகாத செயல்களையும் செய்பவர்கள். பக்திக்கு மாருன செயல் செய்பவர்களேத் தாமே தண்டிப் பவர்கள். இவை யாவும் உலகியலுக்கு மாருனவையே. தனி மனிதனது ஒழுக்க வகையிலும், சமுதாய அற வகை யிலும் வைத்துப் பார்த்தால் இந்தச் செயல்களைப் பாராட்டத் தோன்ருது. இந்தச் செயல்களால் விளைந்த விளைவைக் காணும் கண்ணுக்கு இவை செய்யத் தகாதவை என்றே தோன்றும்.

ஆனல் இவற்றைச் செய்வதற்குக் காரணமான நோக்கம் என்ன, இவற்ருல் இவற்றைச் செய்பவர்களுக்கு நேரே உண்டான கலம் ஏதேனும் உண்டா என்பதை ஆராய்ந்தால், அவர்களைக் குற்றவாளிகளே என்று தீர்மா னிக்கும் துணிவு உண்டாகாது. பக்தி முறுகிவிட்டால் அதுவும் ஒரு வெறியாகவே மாறும்; வெறி, கொள்கை யில்லாமல் யாவருக்கும் தீங்கு பயக்கும். ஆனல் இந்த முறுகிய பக்தியோ, கொள்கையிற் பிறழாமல் கிற்கும்.

கழற்சிங்க நாயனர் இறைவனுக்காக இருந்த மலரை எடுத்த தம் மனேவியின் கையைத் தடிந்த கதையை முன்பு பார்த்தோம். அதனேடு தொடர்புடையது செருத்துணை காயரைது வரலாறு.

சோழ நாட்டுப் பகுதியாகிய மருகல் காட்டில் உள்ள தஞ்சாவூரில் தோன்றினவர் செருத்துணையார். மன்னர் களுக்குப் போரில் துணையாகச் செல்லும் இயல்புடையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/86&oldid=585720" இலிருந்து மீள்விக்கப்பட்டது