பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நாயன்மார் கதை

உலகியலுக்கு அப்பாற்பட்ட முறுகிய சிவபக்தித் திறத்தால் விளைந்தது இது. இதைச் செய்வதனல் செருத்துணையாருக்கு கலம் ஒன்றும் விளேயாது; தீங்கே விளையும். ஆயினும் அதை எண்ணுமல் அவருடைய பக்தி உணர்ச்சியிலே நிகழ்ந்த நிகழ்ச்சி இது. தம்முடைய மனேவி யாக இருந்தாலும் இக்காரியத்தைச் செய்திருப்பார். கழற்சிங்கர் அதைத்தானே பிறகு செய்தார்? மூக்கு மோந்து பார்ப்பதற்கு முன் கைதானே அதை எடுத்தது?’ என்று கையைத் தடிந்தவர் அவர் என்பதை முன்பு பார்த் தோம் அல்லவா?

இத்தகைய செயல்கள் காம் பின்பற்றுவதற்காக அமைந்தவை யல்ல. அசாதாரணமான சம்பவங்கள். சம்பவத்தைவிட அதற்குரிய காரணத்திலே சிங்தை செலுத்துவதுதான் நாம் செய்யத் தக்கது.

56. புகழ்த்துணை நாயனர்

செருவில்லிபுத்துார் என்னும் ஊரில் சிவபெருமான் திருக்கோயிலில் முப்பொழுதும் திருமேனி திண்டிப் பூசனை யும் விழாவும் செய்துவரும் கற்குடி அது. அந்தச் சிவமறை யோர் திருக்குலத்தில் உதித்தார் புகழ்த்துணையார் என்னும் பண்பாளர். தம்முடைய கடமையிலே சிறிதும் தவருமல் காள்தோறும் மனம் உருகி இறைவனைப் பூசித்து வந்தார். அவனுக்கு மனத்தால் அன்பு செய்து, வாயால் அருச்சனை கள் சொல்லி, உடம்பால் வழிபடுவதைக் காட்டிலும் சிறந்த தவம் வேறு ஒன்றும் இல்லை என்ற துணிவோடு அவர் தம் கடமையைச் செய்து வந்தார்.

ஒரு சமயம் காடு முழுவதும் பஞ்சம் வந்துவிட்டது. மழை பல ஆண்டுகளாகப் பெய்யாமையால் நீர் கிலைகள் வறண்டன. வயல்கள் கட்டாங்தரை ஆயின. புல் பூண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/88&oldid=585722" இலிருந்து மீள்விக்கப்பட்டது