பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏயர்கோன் கலிக்காம. நாயனுர் 器

அது கண்டு அவர் தேவியார் தாமும் அவரோடு உயிரை நீக்கத் துணிந்த சமயத்தில், "சுந்தரமூர்த்தி சுவாமிகள் வருகிருர்கள்” என்று சிலர் வந்து தெரிவித் தார்கள். அது கேட்டவுடன் அப்பிராட்டியார், "இங்கே சிகழ்ந்தது ஒன்றும் அவருக்குத் தெரியவேண்டாம். யாரும் அழாதீர்கள். அவரை நன்கு வரவேற்று உபசரி யுங்கள்” என்று உடனிருப்போரை ஏவினர். அப்டியே அவர்கள் செய்ய, நம்பியாரூரர் உள்ளே போந்து ஒர் ஆசனத்தில் எழுந்தருளி யிருந்தார். 'ஏயர்கோனுக்கு வந்த சூலேயைத் தீர்த்து அவருடன் சில காலம் இருக்கலாம் என்று வந்திருக்கிறேன். அவரைக் காண வேண்டும்” என்று கூறினர்.

வீட்டில் இருந்த ஏவலாளர்கள் கலிக்காமர் மனேவியா ருடைய சொற்படி, "அவருக்கு ஒரு துன்பமும் இல்லை; உள்ளே படுத்துக்கொண்டிருக்கிருர்" என்று கூறினர்கள். சுந்தரர், "ஒரு தீங்கும் இல்லையென்ருலும் என் மனம் தெளிவு பெறவில்லை; ஆகையால் அவரைக் காண வேண்டும்” என்ருர். அவர் வற்புறுத்தியதல்ை அவரை அழைத்துச் சென்று கவிக்காமர் உடலைக் காட்டினர்கள். இரத்தம் சொரிந்து குடல் வெளியே தள்ளி இறந்து கிடந்த ஏயர்கோனைப் பார்த்தவுடன், "ஐயோ! இப்படி ஆகிவிட்டதே' என வருந்தி, "நானும் இவர் முன்னே உயிரை நீத்துச் செல்வேன்” என்று கூறி அந்த உடை வாளேப் பற்றினர். அப்போது இறைவன் திருவருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழுந்து, "நான் நண்பனுகி விட்டேன்" என்று விரைந்து சுந்தரர் கையில் இருந்த வாளைப் பற்றிக் கொள்ள, அப்பெருமான் ஏயர்கோஆன வணங்கி அடி வீழ்ந்தார். உடனே வாளே எறிந்துவிட்டுக் கலிக்காமரும் சுந்தரர் காலில் விழுந்து பணிந்தார். இந்த அதிசயம் கண்டு வானவர் மலர் மாரி பொழிந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/9&oldid=585642" இலிருந்து மீள்விக்கப்பட்டது