பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நாயன்மார் கதை

நீங்கள் செய்த உபகாரத்துக்கு ஏற்ற பரிசளிக்கப் போகிறேன்' என்று வாளை எடுத்துக் கொண்டார்; “சிவ

பெருமான்மேல் ஆணேயிட்டு, உங்களே நம்பி வைத்துச்

சென்ற கெல் முழுவதையும் எடுத்துச் செலவிட்ட உங்களுக்கு, இந்தக் கணத்திலே வானுலகம் வழங்குவது தான் தக்க பரிசு" என்று கூறி ஒவ்வொருவராக வாளைக் கொண்டு தடிந்தார். தமக்கு இன்ன உறவினர் என்று பார்க்கவில்லை. அர்ச்சுனன் தன் எதிரே போர்க்களத்தில் கின்ற உற்ருர் உறவினரைக் கண்டு சிறிதே கடுங்கின்ை. கோட்புலியாரோ அனேவரையும் சிவாபராதிகளாகவே கண்டார். தங்தை, தங்தை முறையில் உள்ளவர்கள், தாய், உடன் பிறந்தவர்கள், மனைவி, அவளைச் சார்ந்தார் முதலிய யாவரையும் வேறுபாடின்றிக் களை தடிவது போலத் தடிந்தார்.

ஒரு குழந்தை இந்தக் கூட்டத்தில் சேராமல் தனியே இருந்தது. அந்தக் குழந்தையை நோக்கிக் கோட்புலியார் சென்றபோது ஒருவன், "இந்தக் குழந்தை மிக இளையபருவம் உடையது. இன்னும் சோறு உண்ணும் பருவம் வரவில்லை. பால் குடிக்கும் பச்சைக் குழந்தை. தாங் கள் கூறிய குற்றத்தை இது செய்யவில்லை. இறைவனுக் கென்று வைத்த அமுதுபடியிலிருந்து சமைத்த சோற்றை உண்ணுதது இது. அன்றியும் இந்தக் குடிக்கு இந்த ஒரு குழந்தையாவது மிஞ்சட்டும்' என்று கூறித் தடுத்தான்.

கோட்புலியார், "இவன் சோறு உண்ணுவிட்டாலும் இறைவன் கெல்லே உண்டவளுடைய பாலைக் குடித்தவ னல்லவா? இவனும் ஒழியத்தான் வேண்டும்” என்று அந்தக் குழந்தையையும் துணித்துவிட்டார். -

பழி வருமே, பாவம் வருமே என்ற எண்ணமே சிறிதும் இன்றி, சிவனுக்கு அபசாரம் புரிவார் இவ்

வுலகில் வாழும் தகுதி பெருதவர்கள் என்று தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/94&oldid=585728" இலிருந்து மீள்விக்கப்பட்டது