பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நாயன்மார் கதை

"பற்பாவும் வர்யாரப் பாடி ஆடிப்

பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க கிற்பானை'

என்பது அப்பரடிகள் திருவாக்கு. பல வகையான பாடல் களேயும் வாய் கிரம்பச் சொல்லிப் பாடி ஆடுவது தொண் டர் இயல்பு. இறைவனைப் பாடும் பாடலே பாடல். மற்றவை பாடலாகா. இறைவனைப் புகழும் புகழ்ச்சி தான் மெய்யான புகழ். மற்றவை பொய்ப் புகழ். இறைவன் புகழை, "பொருள் சேர் புகழ்" என்று திருவள்ளுவர் கூறுகிருர், •:

'இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.” பொருள் என்பது உண்மையைக் குறிப்பது. பிற விலங் கினங்கள் பெருத வாயைப் படைத்த மனிதன் அந்த வாயில்ை பெரிய பயனே அடைவதுதான் அழகு. இறை வன் புகழைப் பாடுவதைக் காட்டிலும் பெரும் பயனு டைய செயல் வேறு இல்லை. அதைச் செய்கின்ற காயன் மார், பரமனையே பாடுவார். மன்றினிடை நடம் புரியும் வள்ளலாகிய சிவபெருமானேயே பரம்பொருளாகக் கொண்டு, தென்தமிழிலும் வடமொழியிலும் ஏ&னத் தேச மொழிகளிலும் பேசப்படுகின்ற துதிகளே இற்ைவன் பால் ஒன்றிய உண்மையான உணர்ச்சியோடு உள்ளம் உருகிப் பாடுகிறவர்கள்: பரமனேயன்றிப் பிறரையும் பிற பொருளையும் பாடாதவர்கள் அவர்கள்.

" தென்றமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன

மன்றினிடை நடம்புரியும் வள்ளலேயே பொருளாக

ஒன்றியமெய் உணர்வோடும் உள்ளுருகிப் பாடுவார்

பன்றியுடன் புட்காணுப் பரமனேயே பாடுவார்' என்று அவர்களைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பாராட்டிப் பாடுகிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/98&oldid=585732" இலிருந்து மீள்விக்கப்பட்டது