பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நாயன்மார் கதை

திருப்பெருமண நல்லூரில் ஞானசம்பந்தப் பெருமான் திருமணத்தில் தோன்றிய சோதியுள் அப்பெருமானுடன் புக்கு இறைவன் திருவடியை அடைந்தார்.

70. சடைய நாயனர்

சுந்தரமூர்த்தி காயனர் திருகாவலுரரில் பிறந்தவர். அவரை ஈன்றெடுத்த பெரியார் சடையர் என்னும் திரு காமம் உடையவர். ஆதி சைவ குலத்தில் தோன்றிய உத் தமர். தாம் முன்னைப் பிறவியில் செய்த புண்ணியப் பயணுக நம்பி ஆரூரரைப் பெற்றெடுத்தார்.

அவர்களுக்கு ஆரூரில் உள்ள தியாகராசர் குல தெய்வ மாதலின் தம்முடைய குமாரருக்கு ஆரூரர் என்ற திருநாமத் தைச் சூட்டினர்.

சுந்தரமூர்த்தி காயனர் திருத்தொண்டத் தொகை பாடிய காலத்தில் அவர் தகப்பனர் இறைவன். திருவடியை அடைந்து விட்டார் என்று தெரிகிறது. திருத்தொண்டத் தொகையில், ' என்னவனும் அரனடியே அடைந்திட்ட சடையன்" என்று வருவதல்ை இதனை உணரலாம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம்மைப் பல இடங்களில் சடையனர் புதல்வர் என்று சொல்விக் கொள்கிரு.ர்.

ஊரன், சடையன்றன் காதலன் ” சடையன்றன் சிறுவன் வன்ருெண்டன் ' " சடையன் திருவாரூரன் ' " நண்புட்ைய நன்சட்ையன் சிறுவன்'

சடையன் காதலன் ' - என்பனபோல வரும் இடங்களைக் காண்க. சடைய காயனர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக இன்று விளங்குகிரு.ர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/28&oldid=585768" இலிருந்து மீள்விக்கப்பட்டது