பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை ஞானியார் 23 71. இசைஞானியார்

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் மூன்றுபேர் பெண்மணிகள். ஒருவர் காரைக்காலம்மையார். மற் ருெருவர் மங்கையர்க்கரசியார். பின்னும் ஒருவர் இசை ஞானியார். இந்த மூவரிலும் கர்யன்மார் கூட்டத்தில் சேர்ந்த கணவர்களேப் பெற்றவர் இருவர். கின்ற சீர் நெடுமாற நாயனரைக் கணவராகப் பெற்றவர் மங்கையர்க் கரசியார் ; சடையனராகிய நாயனரைக் கணவராகப் பெற்றவர் இசைஞானியார். இந்த இருவருள்ளும், தாம், தம் கணவர், தம் புதல்வர் என்று குடும்ப முழுவதுமே நாயன்மார்களாக உள்ள பெருமை இசைஞானியாருக்கு இருக்கிறது. அறுபது நாயன்மார்களுடன் இந்தக் குடும் பத்தினரும் சேர்ந்து அறுபத்து மூவர் ஆயினர்.

வன்ருெண்டர், நாவலாரூரர், தம்பிரான் தோழர், ஆளுடைய நம்பிகள் என்று சிறப்பிக்கப் பெறும் சுந்தர மூர்த்தி நாயனரைத் திருவயிறு வாய்க்கும் பேறு பெற்றவர் இசைஞானியார். அவருடைய திருகாமம் இயற்பெயரோ, அன்றிச் சிறப்புப் பெயரோ அறியோம். இசைக்கலையில் பெருஞான முடையவராதலின் யாவரும் அவரை இயற்பெயரால் சுட்டிக் கூருமல், இசைஞானியார் என்று சிறப்பித்துக் கூறும் வழக்கத்தை மேற்கொண் டிருக்கலாம். திருஞானசம்பந்தப் பெருமானுடைய இயற் பெயர் இன்னதென்று சேக்கிழாரும் சொல்லவில்லை; ஞானசம்பந்தப் பெருமானும் கூறிக்கொள்ளவில்லை. ஞானப்பால் உண்டதல்ை பெற்ற சிறப்புப் பெயரே உலகறிய முழங்குகிறது. அதுபோல இசைஞானச் சிறப்பினல் இசை ஞானியார் என்று யாவரும் குறிக்கும் வழக்கு உண்டாயிற்று என்று கொள்வதில் தவறு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/29&oldid=585769" இலிருந்து மீள்விக்கப்பட்டது