பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 2; 72. சுந்தரமூர்த்தி நாயனர்

திரு அவதாரம்

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். கற்பகம் வந்தது; காமதேனு வந்தது: இன்னும் பல பொருள்கள் வந்தன. இந்திரனும் பிறரும் அவற்றைத் தமக்குரிய பொருள்களாக்கிக் கொண்டனர். இன்னும் அமுது எழவில்லை. அதற்குமுன் பெரு கஞ்சு தோன்றியது; தன் காற்றுப் பட்டாலே மயங்கி வீழச் செய்யும் ஆலகால விடம் தோன்றியது.

அப்பொழுது அமரர் அஞ்சி கடுங்கினர். சாவாமை யைப் பெறவேண்டு மென்ற ஆசையினல் பாற்கடலைக் கடையப் போக, இப்போது உலகையே கணத்தில் முடிக் கும் நஞ்சு எழுந்ததே என்று விதிர் விதிர்த்தனர். யாவரும் சிவபெருமானுக்கு முன் சென்று விழுந்து வணங்கித் தமக்கு வந்த இன்னலைக் கூறி முறையிட்டனர். கருணுகிதியாகிய சிவபெருமான், அவர்கள் அதுகாறும், தன்னே கினேயாதிருந்த குற்றத்தை மறந்து அவர்களுக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டான். "கஞ்சைக் கொணருங்கள். நான் அதை விழுங்குகிறேன்" என்ருன்.

'நஞ்சைக் கொணர்வதா! அதன் அருகில் யார் போக முடியும் ' என்று கடுங்கிக் கூறினர் அமரர்.

இறைவன் உள்ளே சென்று கிலேக்கண்ணுடியின் முன் கின்று தன் திருக்கோலத்தைப் பார்த்துக் கொண்டான். கண்ணுடியில் தோன்றிய உருவத்திலிருந்து பேரழகளுக ஒரு மூர்த்தி தோன்றின்ை. சுந்தரளுகிய அவனே கோக்கி, "t உடனே சென்று ஆலால நஞ்சைக் கொண்டுவா” என்று சசன் பணித்தான். அவன் அப்படியே செய்ய, அந்த நஞ்சை இறைவன் விழுங்கி அதனைத் தன் கண்டத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/31&oldid=585771" இலிருந்து மீள்விக்கப்பட்டது