பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நாயன்மார் கதை

இவன் வலிய அதனையும் பற்றிக் கிழித்தெறிந்துவிட்டால் கான் என் செய்வேன்!” என்று கூற, அவ்வாறு செய்ய ஒட்டோம்” என்று அவையினர் உறுதி கூறவே, மறையவர் ஒலயை எடுத்துக் காட்டினர்.

அவையோரின் ஏவலின்படி அங்கிருந்த கரணத்தான் அதை வாங்கின்ை. பழையதாக இருந்த அதை விரித்து வாசிக்கலானன். "நாவலூரிலுள்ள ஆதிசைவ மறை யோன் ஆரூரனகிய நான், பெரிய அந்தணராகிய வெண் ணெய்கல்லூர்ப் பித்தனுக்கு எழுதிக் கொடுத்த ஒலே யாவது: நானும் என்னுடைய மரபில் வருவோரும் இவ ருக்கு அடிமையாகித் தொண்டு புரியக் கடவேமாக! இதற்கு இவை என் எழுத்து" என்று ஒலையை வாசிக்கக் கேட்ட மறையவர்கள், மேலெழுத்திட்டவர்களின் பெய ரையும் கேட்டு, அவர்கள் அவ்வெழுத்துக்களைக் கண்டு, "அவை அவர்கள் எழுத்தே' என்று ஒப்புக்கொண்டனர். பின்பு சுந்தரரைப் பார்த்து, "இந்தக் கையெழுத்து உங்கள் பாட்டனருடைய எழுத்துத்தான என்பதைத் தெளிவாகப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்' என்றனர். அப்போது வழக்கிட வந்த பிராளுர், "இவனுடைய பாட்டனர் எழுதிய வேறு ஒலேகள் உண்டானல் அவற்றைக் கொணர்ந்து இதனேடு கன்ருக ஒப்பு நோக்கிப் பார்த்துத் தெளியுங்கள்” என்ருர். - - - அவையினர் அப்படியே ஆவணக் களரியில் காப்பில் இருந்த ஒலேகளே எடுத்து வரச்செய்து ஒப்பு நோக்கிய பொழுது இரண்டும் ஒத்திருந்ததைக் கண்டார்கள், உடனே, "இனிப் பார்க்க வேண்டியது வேறு ஒன்றும் இல்லை. இந்த மறையவருக்கு நம்பியாரூரராகிய நீர் தோற்றீர். ஆகவே ஆவணத்தில் உள்ளபடி இவருக்கு ஏவல் செய்வது உம்முடைய கடமை” என்று அவையினர் தீர்ப்பு அளித்தார்கள். • -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/40&oldid=585780" இலிருந்து மீள்விக்கப்பட்டது