பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுநீறு பூசிய முனிவர்

வழக்கம் நெடுநாளாக இருந்து வருகிறது. மற்றச் சமயத்தி னரும் ஒரொருகால் நீறணியும் சடங்கை வைத்துக்கொண் டிருக்கின்றனர். *

வைதிக மதத்தினர் யாவரேனும், நீறுபுனேயும் சர்க்தர்ப் பத்தை மாற்ற முடியாது. அக்கினி காரியம் செய்யும் போது முடிவில் ஹோமத்தில் விளங்த நீற்றை எடுத்து ரrையாக இட்டுக்கொள்ள வேண்டுமென்பது விதி.

எல்லாப் பொருள்களேயும் எரித்தால் அவை சாம்பலா கின்றன. எந்த வடிவம் உடைய பொருளாயினும், எந்த நிறம் உடைய பொருளாயினும், யாவும் வெள்ளைப் பொடி யாக, ருேக எரிந்துவிடுகின்றன. அந்த கீற்றை மறுபடி யும் எரித்தால் அது மாறுவதில்லை. எல்லாப் பொருளையும் சங்காரம் செய்து தனி யுண்மைப் பொருளாக கிற்கும் சிவபெருமான், எப்படி எதலுைம் வேறுபடாமல் விளங்கு கிருனே அப்படி விளங்குவது திருநீறு.

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனர் ஆலவாயில் அரு ளிய திருநீற்றுப் பதிகம் இதன் சிறப்பை எடுத்தோதுவது. "வேதத்தில் உள்ளது நீறு" என்று அவர் பாராட்டுகிரு.ர். திருநீற்றுக்குப் பல பெயர்கள் உண்டு. பஸ்மம், ரrை, விபூதி, கற்பம் முதலியவை வட மொழிப் பெயர் கள். நீறு, வெண்பொடி, பொடி, காப்பு முதலியன தமிழ்ப் பெயர்கள். சிவாகமங்களில் இதன் வகைகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. * .

கற்பம், அது கற்பம், உபகற்பம் என்று மூன்று வகை யான திருநீறுகள் உண்டு.

கன்றையீன்றதும், அழுக்கும் நோயும் இல்லாததுமான பசுவின் சாணத்தைச் சத்தியோஜாத மந்திரத்தைக் கூறி ஏற்றுக் கோஜலத்தைச் விட்டுப் பிசைந்து விழலுலர்த்த லாக உலர்த்தி, சிவராத்திரியன்று சிவமந்திரத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/9&oldid=585749" இலிருந்து மீள்விக்கப்பட்டது