பக்கம்:நாராயணன்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவைகளை யெல்லாம் ஆசிரியரிடம் சொல்லப்போகின்றானாம், " என்றான்.

அதற்குள் மாணிக்கம், " அடே நாராயணா, நீ இதை இவ்வளவோடு நிறுத்தி விட்டால் பிழைத்தாய். நாங் கள் உனக்கும் இந்தப் பழத்தில் ஒரு பங்கு தருவோம். அப்படியல்லாமல் இதை ஆசிரியரிடம் சொல்லுவதாய் இருந்தால் நா ங் க ள் எல்லோரும் சேர்ந்து உன்மீதே பழியைப் போட்டு விடுவோம் ; எச்சரிக்கை,' என்றான்.

அப்போது அருகே இருந்த சிறுவர் களில் சிலர், ” ஆம் ; அப்படியே செய்வோம்; அடே எச்சரிக்கை," என்றார்கள்.

நாராயணன் சிறிதுநேரம் ஒன்றும் தோன்றாமல் விழித்தான்.

தீயாரைக் காண்பதுவும் தீதே;
திருவற்ற
தியார்சொல் கேட்பதுவும் தீதே ;-தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே ; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் தீது.

என்னும் பாட்டின் பொருள் அவனுக்கு அப்போதுதான் நன்றாக விளங்கிற்று. பிறகு, அவன் ஒன்றும் சொல்லாமல்

10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/13&oldid=1338919" இலிருந்து மீள்விக்கப்பட்டது