பக்கம்:நாராயணன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தகைய திருட்டுச் செயலைச் செய்திருப்பான்!' என நெடுநேரம் எண்ணினார்;பிறகு,அவனை உற்று நோக்கினர். அப்போது, அவன் முகம் மாசு மறு வின்றி விளங்கியது.ஆதலால்,அவருக்குஇருந்த சிறு சந்தேகமும் உடனே விலகியது.

பின்னர் அவர் மறுபடியும சிந்தனேயில் ஆழ்ந்தார். வழியில் மாணிக்கம் வந்துகொண்டிருந்தது அவர் நினைவிற்குவந்தது.

ஆதலால்,அவர் உடனே அவன் முகத்தை உற்றுப் பார்த்தார். அப்போது அவன் தலை குணிந்து கொண்டு, ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு ஆசிரியரைப் பார்ப்பதும், படிப்பது போல் நடிப்பதுமாக இருந்தான். மாணிக்கத்தின் பார்வையில் அவருக்கு ஐயம் தோன்றியது. ஆனாலும்,அவர் அதனை அப்போது தெரிவிக்கவில்லை.

அவ்வாசிரியர் எப்போதும் சிரித்த

முகமாக இருப்பவர். அவர் சாதாரணமாக வகுப்பிற்கு வந்ததும் பாடத்தைத்

             34
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/37&oldid=1340219" இலிருந்து மீள்விக்கப்பட்டது