பக்கம்:நாராயணன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழத்துக்கா இவ்வளவு பாடு ! நாம் இத்தனைப் பேர் இங்கே இருக்கின்றோம். அது நொடிப் பொழுதில் இருக்கும் இடம் தெரியாமற் போய்விடாதா! நல் லது;பொழுது போகிறது," என்று சொல்லி ஒரு கல் எடுத்து ஓங்கி எறிந்தான் ; அது பழத்தின்மீது படவில்லை. பிறகு முருகன் எறிந்தான்; அதுவும் படவில்லை; மாணிக்கம் எறிந்த கல்லும் தவறி விட்டது.

பிறகு அங்குள்ள ஒவ்வொரு சிறுவனும் கல் எறிந்தான். ஒன்றேனும் அப் பழத்தின் மீது படவில்லை.முடிவில் நாராயணன் முறை வந்தது. அப்போது நாராயணன், "நீங்கள் இவ்விதம் செய்வது சரி அன்று. நீங்கள் என்னை மிகவும் வற்புறுத்துவதால் நானும் கல் எறிகின்றேன். ஆனால், மாம்பழம் கீழே விழுந்தால் அதை நீங்கள் என்னிடம் கொடுத்துவிட வேண்டும். அதை நான் ஆசிரியரிடம் கொடுத்து விடுவேன். இது உங்களுக்குச் சம்மதந்தானா?" என்றான்.

பிள்ளைகள் ஒருவரை யொருவர் உற்றுப் பார்த்தனர்.பிறகு மாணிக்கம்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/9&oldid=1339008" இலிருந்து மீள்விக்கப்பட்டது