பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தலைச் சாத்தனார் 9 நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டை ஆண்டு வருங்கால் சோணாட்டைச் சோழன் கரிகாற் பெரு வனத்தான் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் சோழள் உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன்; தம்முள் மாறுபட்டு வழக்குரைக்க வந்த முதியோர் தன்னை இளையனென்றிகழ்ந்தமை அறிந்து, தான் முதியனாய் வந்து அவர்கள் வழக்கைத் தீர்த்தவன். அவன் இளைஞனாயிருந்த போது அவனைக் கொல்லப் பலர் முயன்றனர் என்றும், அதனால் அவன் கருவூர் சென்று அங்கு வசித்து வந்தான் என்றும், அவ்வமயம் அரசாள் வதற்குரியோர் இன்மையால் நாட்டிற் குழப்ப மேற்பட, அக்கால வழக்கப்படி அமைச்சர் பட்டத்து யானையை விடுத்து அரசனைத் தேடுமாறு செய்தனர் என்றும், அக்களிறு கருவூரை அடைந்து ஆங்கிருந்த கரிகாலனைத் தன் முதுகின் மீது எடுத்து வைத்துக் கொண்டுவந்து, அவனை அரசனாக்கிற்று என்றும் தெரிகிறது. அவன் அரசாளத் தொடங்கியபோது, அவனது நாட்டைக் கைப்பற்ற எண்ணிய சிலர் அவனுடன் பகைமை கொண்டு அவனைச் சிறைப்படுத்தினர்; அரசன் சிறையைக் கடந்து வெளியேறுவன் என நினைந்து சிறைச்சாலைக்கு தீமூட்டினர். எனினும்,கரிகாலன் தீயினுக்கு அஞ் சா து வெளிப்போந்தனன். அப்போது தீயால் அவன் கால் கருகிவிட்டது. அதனால், அவன் கரிகாலன் (கரிந்த காலை உடை .யவன்) என வழங்கப்பட்டான். .