பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 நாற்பெரும் புலவர்கள் யும் பாணர்க்கும் புலவர்க்கும் தந்துள்ளாய்” என்பதை அறிந்து பாணர்பலர் இன்றும் நின்னைக் காண வருகின்றனர். மணங் கமழ் மார்ப! நின் தாள் நிழலில் உள்ளேர்ர் இன்பத்தையே நுகரு கின்றனர். நின்னைப் பாடாத பாணன் இலன்;. போற்றாத புலவன் இலன் எனின், நின் பெருமையை என் என்பது கொற்ற வேந்தே! இலங்கு கதிர் திகிரியினையுடைய நின் முன்னோர் நிச்சயமாக நின்னைப்போல் அசைவில்லாத மேற். கோளை உடையராகையாலே, இம்மண்ணுலகத் தினை மேற்பட்ட புகழோடு ஆண்டாராவார். அவர்கள் மரபில் தோன்றிய நீயும் புகழோடு வாழ்தலைப் பொருந்தினை. நின் பெருமையை யாவரே விரித்துரைக்க வல்லார்!” இங்ங்னம், கபிலர் பெருமான் பத்துப் பாக் களைப் பாடி, அவற்றின் மூலமாகச் சேரனின் ஒப்பற்ற குணாதிசயங்களை விரித்துப் புகழ்ந்தார். சேரன் பெரு மகிழ்வு அடைந்து, புலவர்பால் அன்புகொண்டு. நூறாயிரங் காண ம் பொன் அளித்து. தோடு, நன்றா' என்னும் குன்றின் மீதேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாட்டையும் காட்டிக் கொடுத் தான. கபிலர் உயிர் நீத்தமை கபிலர் சேர நாட்டினின்றும் நீங்கி, திருக் கோவலூரை அ ைட ந் தார்; அடைந்தவர், பெண்ணை நதியின் மத்தியில் ஒர் மணல் திட்டில்