பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. - - நாற்பெரும் புலவர்கள் பட்ட பொற்றேரின் மேல் பொலிவொடு தோன்று தலாற் கரிய கடலின் கண்ணே ஓங்கி எழுகின்ற சிவந்த ஞாயிற்றினது ஒளியையுடையை அத் தன்மையை ஆதலால், நின்னைச் சினப்பித்தவ ருடைய நாடு, தாயில்லாத உண்ணாக் குழவி போன்று ஒழியாது கூப்பிடும்.” எனச் சோழனது பலதிறப்பட்ட போர் வன்மையைச் சிறப்பித்துப் பாடினார். அவ்வளவில் சோழ புலவரிடம் மெய்யன்பு பாவித்து அவருக்கு வேண்டும் பரிசிலை விரும்பித் தந்தனன். புலவர் பெருமகிழ்ச்சி தோன்ற அவனைத் தம் வாயார வாழ்த்தி, மதுரையை அடைந்தார். பரணர் போர்க்களத்து இரங்கல் சேர நாட்டை ஆண்டுவந்த நெடுஞ்சேர லாதன் என்பானுக்கும் சோழன் வேல் பல் தடக்கைப் பெருநற்கிள்ளி என்ப்ானுக்கும் போர் மூண்டது. போர்க்களத்தில் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டு இருவரும் மாண்டனர். அது கேட்ட கழாத்தலையார் என்னும் புலவர் போர்க் களத்துச்சென்று பாடிப் புலம்பினர். இருபெரு வேந்தர் இறந்த செய்தியைக் கேட்ட பரணரும் போர்க்களத்தை அடைந்தார்; வேந்தர்கள் மாண் டதை நினைந்து மனம் வருந்தினார்; இருவரையும் நினைந்து பின் வருமாறு கூறிப் புலம்பினர். "எல்லா யானைகளும் அம்பாற் கலங்கி இனி மேல் உண்டாக்கும் போர் குன்றிப்படையிடத்துப்