பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணர் 61 காண்டற்கு இன்னதாக உறைகின்றவள் பொருத் தற்கரிய நினைவால் உண்டாகிய நோயைத் தீர்ப் பாயாக’ என்ற அரிய பொருளை அமைத்து, செந் தமிழ்ச் செய்யுள் ஒன்றினை அவன் மனம் உருகப் பாடினாா. - பரணர் போன்றே கபிலர் முதலாய புலவர் பெருமக்களும் சென்று அவனுக்கு அறிவுறுத்தினர் என்பது தெரிகிறது. புலவர்கள் வேண்டியதை மறாதளிக்கும் அருங் குணாதிசயங்களையுடைய அவ்வள்ளல், பரணர் முதலான சான்றோர்களின் வேண்டுகோளின்படி பரத்தையைத் துறந்து, இல்லாளை அடைந்திருப்பான் என்று நாம் கருதுதல் தவறாகாது. - சேரன்-செங்குட்டுவன் செங்குட்டுவன் என்பான் சேர நாட்டை ஆண்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பானது மூத்த மைந்தன். இவன் தனது இளமைப் பருவத்திலேயே அரசன் ஆனான். இவன் சேர, அரசர்களில் முதன்மை பெற்று விளங் , கியவன். இவ்வேந்தன் தன் தாயான நற்சோணை' என்பாள் கணவனோடு உடன்கட்டை ஏறியபோது அவளது உருவத்தைச் சிலையில் செய்ய விரும்பி னான்; அதன்படி கல்லைக் கொண்டுவர இமயத் திற்குச் சென்றான். அங் கு ள்ள அரசர்கள் இவனைப் பெருஞ்சேனையோடு எதிர்த்தனர்.