பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நாற்பெரும் புலவர்கள் சிலையை ஏற்றிக் கங்கையில் நீராட்டித் துாய்மை செய்வித்தான்; மீளவும் அவர்கள் முடிமீது வைத்தே தன் பரிவாரங்களோடு வஞ்சிமாநகரை அடைந்தான். x . மன்னன் வீரபத்தினிக்கு ஆலயங் கட்டுவித்து, தன் நாட்டில் சிறைப்பட்டோரை வெளியேற்றிச் சிறைக் கூடங்களைத் தூய்மை செய்வித்தான்; வஞ்சி மாநகரை எழில் பெற அலங்கரிக்கச் செய் தான். பத்தினிக் கடவுளின் விக்கிரகத்திற்கு, அணிகளைப் பூட்டி அலங்கரித்துப் புட்பாஞ்சலி செய்து, திக்குத் தேவதைகளைக் கடைவாயிலில் ஸ்தாபித்து, வேள்வி ஒமங்களும் விழாக்களும் குறைவறச் செய்தான். யாவரும் பத்தினிக் கடவுளைத் தொழுது நின்றனர். அவ்வமயம், வளைக்கைகளும் மேகலாபரணமும் வயிரத் தோடணிந்த செவிகளும் விளங்க, மின்னற்கொடி போலும் உருவமொன்று விசும்பில் தோன்றியது. அதனைக் கண்ட செங்குட்டுவன் முதலானோர். அதிசயமடைந்தனர். அவர்கட்குக் கண்ணகியாகிய தெய்வம் தன் மெய்யுவருவம் காட்டி உரத்த குரலுடன், 'தென்னவன் தீதிலன்; தேவர்கோன் தன்கோயில் நல்விருந் தாயினான்; நானவன் தன்மகள்; வென்வேலான் குன்றில்விளையாட்டு யானகலேன் என்னொடுந் தோழியீர்! எல்லீரும் வம்மெல்லாம் என்றது