பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணர் . 69

புலவர் பாடிய பாக்கன்

பரணர் பாடியனவாக நற்றினை முதலிய சங்க நூல்களில் சுமார் எண்பது பாடல்கள் வரை .யில் கிடைத்துள்ளன. இவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றினும் தம் காலத்தவரைப் புகழாமலும் தம் காலத்து நிகழ்ச்சிகளில் ஒன்றைப் புகுத்தா மலும் பாடுவதில்லை என்பது இவர் பாடல்களை நன்கு ஆராய்வோருக்குத் தெள்ளிதின் விளங்கும். இவர் கொடைவள்ளல்களில் ஒருவனான "வல்வில் ஓரி'யைப் புகழ்ந்து கூறியுள்ளார் : ஒரி என்பவன் வலிய வில்லை உடையவன்! அவனது காட்டில் உள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து கிடக்கும். அவை இளமானுக்கு வெறுப்பில்லாது உணவாக நிற்கும்." - புலவர், கொல்லிமலையில் அமைந்த கொல்லிப் பாவையின் தோற்றமும் அதன் இயல்பும் ஆங்காங்கு உவமை முகத்தாற் கூறியுள்ளார்: கொல்லிமலைச் சாரல் தெய்வத்தாற் பாதுகாக்கப்பட்டு வருகின்ற தீது தீர்ந்த நெடிய கொடு முடியையும் அழகிய வெள்ளிய அருவியையும் உடையது. அச்சாரலில் காற்று மோதி அப்பினும், வலிய மழை விரைந்து வீசினும், சினங் கொண்டு இடிமுழங்கி மோதினும், இவையே அன்றி வேறு பல ஊறுபாடுகள் தோன்றினும், பெரிய இவ்வுலகமே சினங்கொண்டு. எதிர்ப்பினும், தன் அழகிய நல்ல வடிவங்கெடாத