பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்கீரர் - 81 கீழிருந்த மூன்று செப்பேடுகள் வெளிப் போந்தன. அவன் அவற்றைப் பார்க்க, அவை பொருளதி காரச் சூத்திரங்களையுடையனவாகக் கண்டான்; களி பேருவகை கொண்டான். அரசன் பொருளதிகாரம் கிடைக்கவில்லை எனறு கவல்வதை உணர்ந்து கண்ணுதலான் செய்த திருவிளையாடல் போலும் இது! என்னே எம்பெருமான் தடங்கருணைத் திறம் இருந்த வாறு!" என்று வியந்து, அரண்மனை வாயிலை அடைந்தான். அடைந்தவன் அரண்மனைக் காவலரிடம் தான் வந்த செய்தியை அறிவித்தான்; அவர்களும் அரசனிடம் அந்தணன் செய்தியைத் தெரிவித்த னர். அரசன் அந்தணாளனை அருகழைக்க, அவனும் மன்னனையடைந்து. செப்பேடுகளைக் காட்டினான். அரையன் மனமகிழ்ந்து, சொக் கேசன் நமது மனக்குறையை மாற்றச் செய்த சூத்திரங்கள் இவை. என்னே எம்பெருமானின் கருணை!" என வியந்து, பெருமான் கோயில் கொண்ட திக்கை நோக்கித் தெண்டனிட்டான். பின்னர், அரசர் பெருமான் சங்கப் புலவர்களைக் கூவியழைத்து, "எம் கருணைக் கடல் அருளிய இப் பொருளதிகாரத்தினைச் சங்கத்திருந்து ஆராய்ந்து பொருள் காண்மின்' என்றான். " " - புலவர்கள் செப்பேடுகளுடன் சங்கத்தை அடைந்து, கன் மாப் பலகையேறி ஆராய்ந்தனர். நா-6 - -