பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. நாற்பெரும் புலவர்கள் முண்டு. நீர் கூந்தற்கு இயற்கையில் மணம் உண்டு என்று உமது கவியில் குறிப்பிட்டு இருந்தீர். அத னால், அது பொருட் குற்றமுடைத்து" என்றார். அப்போது அழல்நிறக் கடவுள், "நன்று. பத்தினிப் பெண்டிர் கூந்தற்கும் தேவமாதர் கூந் தற்கும் இயற்கையில் மணமில்லையோ?” என்றார். நக்கீரனார் 'அவற்றிற்கும் இயற்கையில் மன மில்லை" என விடை யிறுத்தார். சிவபிரான் மேலும் புலவரை நோக்கி, நீ வழிபடும் சிவபிரான் பாகத்தமர்ந்த ஞானப் பூங்கோதையின் கூந்தற் கும் இயற்கையில் மணமில்லையோ?” என்று வினவ "ஆம், அதற்கும் இயற்கையில் மணமில்லை" என்று சிறிதேனும் அஞ்சாராய்ப் புலவர் பெருமான் விடை ப்கர்ந்தார். . - பார்த்தான் பரமன், நக்கீரர் பிடிவாதக்கார ராயிருப்பதைக் கண்டு வருந்தி,தன்னை இன்னான் என்பதை அவர் அறிந்து கொள்ளட்டுமென்று, எரி விழியைச் சிறிதே காட்டினன். அதற்கும் அஞ்சா நெஞ்சம் படைத்த நக்கீரர், 'உமது அங்கமெல்லாம். எரி விழியாயினும் உமது கவி குற்றம் குற்றமே” என்று, தாம் கொண்ட கொள்கையையே சாதித் தார். சிவபெருமான் பொறுக்க மாட்டாதவனாய் நக்கீரரை நோக்கி, "ஐயா! நீ உமையின் கூந்தலை இழித்துரைத்தமையின் இம்மையிற் குட்ட நோயுற்று அலைக" எனச் சபித்தனன். சாபத்தைக் கேட்டதும் நக்கீரர் நடுநடுங்கி! பெருமான் கழலடிகளில் வீழ்ந்து, "ஐயனே,