பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

101


பைத் தக்க வழியில் பயன்படுத்துவது அறிவுடைமையாகும். எனவே தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களைக் கவனித்துக் கொண்டும் செயலாற்றுவது வெற்றி தரும்.

சிதல் அரிக்கப்பட்ட ஆலமரம் அஃது அழிந்துவிடாமல் காப்பது அவைவிடும் விழுதுகள்; அவை அம் மரத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. மக்களும் தந்தை தொடங்கிவிட்ட தொழிலைத் தொடர்ந்து காப்பது அவர்தம் கடமையாகும்.

மதங்கொண்ட யானையை அதன் கதம் அடக்கும் வலிமை உடைய வள்ளுகிர் உடைய சிங்கம் போன்ற ஆற்றல் உடையவர்கள் வீழ்நிலை உற்றபோதும் தாழ்வுறும் செயல்களில் முயலார்; சிறுதொழில் செய்து ஜீவிக்கலாம் என்று மனம் சோர்வு பெறமாட்டார்.

கரும்பின் பூக்கள் குதிரையின் பிடரிபோல் காண்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும். மணம் என்பது அதன் குணம் அன்று; நறுமணம் தராது. அதே போலக் குடிப்பிறப்பு மட்டும் ஒருவனை உயர்த்திவிடும் என்று கூற முடியாது. படிப்பும், பண்பும், விடாத உழைப்பும், செயலும் மட்டுமே அவனை உயர்த்திக் காட்டும்.

சோற்றுப் பிண்டங்களாய்த் தண்டசோறு தின்று கொண்டு தரித்திரராய் வீட்டில் எடுபிடிகளாகச் செயல்பட்டு ஏற்றமின்றி வாழ்வார்; அவர்கள் சோம்பேறிகள், கூழைக் குடித்தாலும் தன்மானத்தோடு வாழ்ந்து விடாத உழைப்பால் உயர்வு பெற்று ஒளிபெற்றுத் திகழ்வார்; அவர்கள் உழைப்பாளிகள். உழைப்பே உயர்வு தரும்; அண்டிப் பிழைப்பது அடிமைத்தனம் ஆகும்.