பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



21. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
(சுற்றம் தழாஅல்)

சுமைதாங்கி என்ற நிலையில் மகனை வயிற்றில் தாங்கி அவள் பெற்றவை நோய்கள், மசக்கைகள் இவை எல்லாம் மகனைப் பெறும் நாள் மறுக்கிறாள். அவை இன்ப நினைவுகளாய் நிற்கின்றன. பட்ட சுமை எல்லாம் ஒரு கணத்தில் மறக்கிறாள் மகனைப் பெற்ற மகிழ்ச்சியில். அதேபோலத் தாளாற்றிப் பொருள் தேடுகிறான்; பின்பு காலாற்றிச் சுற்றத்தோடு சூழ இருந்து உண்கிறான். அவர்களோடு பகிர்ந்து உண்டு, அளவளாவுகின்றான். அவர்கள் பசியைப் போக்கிய பெருமிதம் அவனை ஆட்கொள்கிறது. காதலியின் கடைக்கண் பார்வையில் விண்ணையும் சாடுவர் இளைஞர்கள்; பிறர் வருத்தம் தீர்கிறது என்றால் விண்ணையும் வளைத்து மண்ணையும் அளந்து அல்லும் பகலும் பாடுபட யாரும் முனைவர். சுற்றத்தினரைத் தழுவிக் கொண்டு அவர்கள் துயர் தீர்ப்பதே செல்வம் பெற்றதனால் ஏற்படும் பயன் ஆகும். நல்ல ஆண் மகனுக்குக் கடமைகள் சில உள்ளன. ஆளுமை உடையவன் என்று நாளும் அவனைப் பாராட்டுவர். கோடையிலே இளைப்பாறும் குளிர் மரநிழல் என்று சொல்லும்படிப் பிறர் வாடையிலே அவர்க்கு ஆறுதல் தருபவனே சிறந்த தலைமகன் ஆவான். அது மட்டுமன்று; பழுத்தமரம் உள்ளுரில் பொது இடத்தில் இருக்கிறது. அது பலர் பசியைத்